பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 111 சுப்பிர (பாட்டு) : பல்லவி ஆசை யற்றவன் அல்லலற்றவன் பாசமுற்றவன் படர்கள் உற்றவன் (ஆசை) அனுபல்லவி வீசுங் கண்ணிலும் விளையும் மண்ணிலும் பேசும் போன்னிலும் பெருமை வாழ்விலும் (ஆசை) சரணம் வேணு மென்றவன் வீசமும் பெருன் வீசுவோன் அடி வீழும் லோகமே வேணு கானன்வில் விசயனுக் கெனக் காணுங் கீதையின் கருத்தை யெண்ணியே (ஆசை) ராம : புதிய பாட்டுப் போலிருக்கிறதே. ரொம்ப நன்ருக இருக்கிறது. உயர்ந்த கருத்து, கீதையின் கருத்தையெல்லாம் அதில் கொண்டு வந்து விட்டரியே-அது பிரமாதம். சுப்பிர : போதும் போதும்-உன்னுடைய புகழ்ச்சி யெல்லாம் தேவையில்லை, ராம : இங்கு வந்த பிறகு வேறு ஏதாவது புதிய பாட்டு இயற்றியிருக்கிருயா? சுப்பிர : கோயிலுக்குப் போக நேரமாகிவிட்டது. வா. போவோம். புதிய பா ட் டு க் க ளே நாளை காலையில் பாடுகிறேன். ராம : சரி, உன்னிஷ்டப்படியே செய். ஆனல் தயவு செய்து என்னைக் காலையிலே நாலு மணிக்கே எழுப்பித் தொந்திரவு பண்ணுதே.