பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 இளந்துறவி சுப்பிர கமலா, வாழ்க்கைத் தோணியிலே நாமிருவரும் கைகோத்துக்கொண்டு செல்வோம் வா. அதன் அந்திய காலத்திலே இருவருமாகச் சேர்ந்து இறைவன் அடியை நோக்கிச் செல்லப் பாடுப்டு வோம். இப்பொழுது அந்த நினைவு வேண்டாம். கமலா : உலக சுகங்களெல்லாம் மாயை என்று உங்கள் வாக்கிலிருந்துதான் நான் உணர்ந்தேன். என் உள்ளம் உலக சுகங்களை நாடி அலைந்தபோது உங்களை இங்கு வரும்படி அழைத்தேன். அன்று நல்ல வேளேயாக வர மறுத்துவிட்டீர்கள். உங்கள் பாட்டையும் உபதேச மொழிகளையும் கேட்டுக் கேட்டு என் வாழ்க்கையே புனர்ஜன்மம் பெற்று விட்டது. நீங்கள் இன்று இவ்வாறு பேசுவது தகாது. சுப்பிர : கமலா, காதலால் வாடும் என்மேல் உனக்குக் கருணையில்லையா ? கமலா (கண்டிப்பாக) : நீங்கள் பேசுவது சரியான வார்த்தையல்ல. எனது வாழ்வில் உன்னத நோக் கத்தை அளித்ததற்கு நீங்கள் காரணமாக இருந்தீர் என்பதற்காக நான் இவ்வளவு நேரம் பொறுத் திருந்தேன். மேலும் மேலும் இவ்வாறு பேசி என் மனதை நோகச் செய்யாதீர்கள். சுப்பிர : கமலா, உன்னைப்பற்றி நினைத்ததெல்லாம் பாழாய்ப் போகவா ? கமலா : என்னைப்பற்றி என்ன நினைத்தீர்கள் ? இளம் கைம்பெண்ணைக் கேட்டால் மறுவார்த்தை சொல் லாமல் பின்னல் வருவாள் என்றுதானே எண்ணி, aர்கள்? உமது துறவு வேஷத்துக்கு இது தகுமா ?