பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இளந்துறவி அனுபல்லவி கங்குலும் வந்தது காரிருள் சூழ்ந்தது கானகத் துனைத் தேடிக் கருகிநான் வந்தேன் (எங்கு) சரணம் மின்னல் வெடித்துமே வீரிடக் கால்களை பின்னிக் கொடிகளும் பிடித்திட அயர்ந்தேன் என்னிடர் கண்டுநீ இறங்கியென் எதிர்வந்து அன்புடன் கரம்பற்றி அனைத்திடு வாயே (எங்கு) (பாடிவிட்டு ஜன்னல் வழியாகப் பார்க்கிருள். உறங்கிடலாமோ என்ற பல்லவி கேட்கிறது.) காட்சி மூன்று [சுப்பிரமணியன் உள்ள சத்திர அறை. காலே எட்டு மணி : சுப்பிர லக்ஷமி, இதுவரை நான் சொல்லிக் கொடுத்த பாட்டுக்களையெல்லாம் நன்ருகப் பாடுகிருய். எங்கே மறந்து போய்விட்டாயோ என்றுதான் பாடச் சொன்னேன். எனக்கு மிகவும் திருப்தி. இனிப் புதிய பாட்டொன்று ஆரம்பிக்கலாமா? லகஷ்மி : நேற்றிரவு ஒரு புதிய பாட்டுப் பாடினர்களே அது எனக்குப் பிடித்திருக்கிறது. சுப்பிர : நேற்றிரவா? நான் பாடியது உனக்கெப்படித் தெரியும்?