பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 109 ராம : இன்னும் உன்னுடைய சங்கீதத்தைத் துறந்துவிட வில்லையோ? சுப்பிர : அதை விட்டுவிட முடியுமா? அதுதான் என் னுடைய உயிர் மூச்சு. ராம (சிரித்துக் கொண்டே) : அதை உன்னோடு வைத்துக் கொள்வதுதானே? உன்னுடைய உயிர் மூச்சு எல்லோர் மேலும் படவேண்டுமா என்ன? சுப்பிர : நான் எங்கே போனலும் அங்கு யாருக்காவது இரண்டு பாட்டாவது கற்றுக்கொடுக்காமல் இருக்கப் போவதில்லை. ராம (கேலியாக) . அதுவும் இந்த மாதிரி அழகான பெண்கள் உன்னைத் தேடி வரும்போது... சுப்பிர : நீ இப்படியெல்லாம் பேசக்கூடாது ராமநாதா. நான் ஏன் துறவறம் பூண்டேன் என்பது உனக்குத் தெரியாதா என்ன? ராம : எனக்குத் தெரிந்ததனுல்தான் சொல்லுகிறேன். நீ சாஸ்திரங்கள் எல்லாம் படித்திருக்கிருய். நல்ல அனுஷ்டானங்களை யெல்லாம் கைக் கொண்டிருக் சுப்பிர ஆளுல் என்ன-நீ சொன்னவை மட்டும் காரண மல்ல. துறவு பூண்டதற்கு வேண்டிய உளப்பக்குவம் எனக்கு முன்பே இருந்திருக்கிறது. ராம : என்னமோ உன்னுடைய நண்பன் என்கிற முறையில் சொல்லுகிறேன். இவ்வளவு சிறுவயதில் துறவு கொள்வதென்பது என்னுல் நினைக்க முடிய வில்லை.