பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 123 கொஞ்சம் பட்சணம் ஒரு நாளேக்குச் சாப்பிடக் கூடாதா ? எங்களுடைய ஆசையை... சுப்பிர : நான் யார் வீட்டிலும் சாப்பிடுவது கிடையாது லக்ஷ்மி. லக்ஷ்மி : அப்பா வந்து தங்களை அழைத்த போதும் யார் வீட்டிற்கும் வருவதில்லை என்று சொல்லிவிட்டீர்கள். பட்சணம்கூட சாப்பிடக்கூடாதா ? சுப்பிர : லக்ஷ்மி, யார் வீட்டிலும் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருக்கிறேன். லகஷ்மி : கோபித்துக்கொள்ளக் கூடாது. அது எங்க ளுக்குத் தெரியாது. சுப்பிர : பட்சணம் சாப்பிடு, வீட்டுக்கு வா என்றெல்லாம் யாரும் என்னிடம் பேசவே கூடாது. மறுபடியும் இப்படிக் கூறுவயாளுல் நீ இங்கே வர வேண்டாம். பாட்டும் சொல்லித் தரமாட்டேன். லசஷ்மி : இதில் ஒன்றும் தவறில்லையென்றுதான் அக்கா கொடுத்தனுப்பினள். உங்களுக்கு இஷ்டமில்லே யென்ருல் இனிமேல் கொண்டுவரவில்லை. சுப்பிர : நான் உலகத்தையே துறந்தவன். எனக்கு யார் வீட்டுக்காவது போகவோ, யார் வீட்டிலாவது உண்ணவோ இஷ்டம் கிடையாது. எனது விரதத் திற்கு அது விரோதம். நீ சிறுபெண். இதெல்லாம் உனக்குத் தெரியாது. லகஷ்மி : தாங்கள் சந்தோஷப்படுவீர்களென்று அக்கா கொடுத்தனுப்பினுள். இனிமேல் இப்படிக் கொண்டு வரமாட்டேன். மன்னிக்கவேணும்.