பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளந்துறவி 115 இராது. வெளியூர் போய்விட்டுத் திரும்பிவந்து நம்மை பார்க்கும் வரையிலும் அவருக்கு நிம்மதி ஏது ? லகஷ்மி : அப்படி என்னக்கா பயம் ? நீதான் எனக்குத் துணையாக இருக்கிருயே ? கமலா : நான் உனக்குத் துணை ; எனக்கு யார் துணை ? லகஷ்மி : பேரூர்ப் பட்டீசுவரர்தான் துணை யென்று அப்பா அடிக்கடி சொல்லுவார். கமலா : எனக்கு யாருமே துணையில்லை லக்ஷ்மி, வா, போய் அடுப்பைக் கவனிக்கலாம். அப்பாவுக்கு வெந்நீர் போட்டு வைக்கவேணும். காலையிலிருந்து குளித்திருப்பாரோ என்னவோ ! (எழுந்து உள் அறையை நோக்கிச் செல்கிருர்கள்.) காட்சி மூன்று (அதிகாலை-இளந்துறவி சுப்பிரமணியம் தங்கியுள்ள சத்திரத்தின் அறை. சுப்பிரமணியம் உறங்கு கின்ற ராமநாதனே எழுப்புகிருன்..! சுப்பிர ராமநாதா, எழுந்திரு. மணி ஐந்தாகிவிட்டது. இன்னும் என்னடா தூக்கம் ? ராம (துரக்கத்தோடு): குளிர், இங்கே ரொம்ப அதிகம், எப்படித் தண்ணீரில் குளிக்கிறது இந்த நேரத்திலே ? சுப்பிர : முதலில் எழுந்திரு, பிறகு எப்படி என்று சொல்லுகிறேன்.