பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் எங்கே ! 101 சதாசிவம் : நானே விஷயததை அவளுக்குச் சொல்லி விடுகிறேன். நீங்கள் கொஞ்சம் பொறுக்க வேணும். லலிதா, அந்த ஓவியன் என்ன வந்து கேட்டானல் லவா? அவனுடைய வர்ணப் பெட்டிகளை இங்கே வைத்துக்கொள்ள நான்தான் அவனுக்கு அனுமதி கொடுத்தேனென்று சற்று முன்புதான் இன்ஸ்பெக் டரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்... லலிதா : வர்ணப் பெட்டிகளேயா? அதைப்பற்றி என்ன இப்பொழுது? சதாசிவம் : அவை வர்ணப் பெட்டிகள் இல்லையாம்... திருட்டுச் சாராயம் வைத்திருக்கும் பெட்டிகளாம்! லலிதா (திடுக்கிட்டு) : அப்படியா?...இன்ஸ்பெக்டர் சார், அந்த ஒவியனுக்கு இடம் கொடுத்தது நான்தான். இவருக்கு அந்த விஷயமே தெரியாது. அந்தக் குற்ற மெல்லாம் என்னுல் நடந்ததுதான். சதாசிவம் : இன்ஸ்பெக்டர், அவள் என்னே இதில் சிக்க வைக்கக்கூடாதென்று இப்படிப் பேசுகிருள். உண் மையில் நான்தான் இந்தக் குற்றத்திற்குப் பொறுப் பாளி. இன்ஸ்பெக்டர் : நீங்கள் இரண்டு பேரும் கூறுவதிலிருந்து எனக்கு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது அவன் தன்னை ஒரு ஒவியன் என்று உங்களை நம்பும் படி செய்து உங்கள் வீட்டையே தனது திருட்டு வியாபாரத்திற்கு உபயோகப்படுத்தியிருக்கிருன். லலிதா : அவன் ஒரு அயோக்கியன் என்று சற்று முன்பு தான் எனக்குத் தெரியவந்தது. இன்ஸ்பெக்டர் : அவன் ஒவியன்கூட அல்ல, எல்லாம் ஏமாற்றுவித்தை. வெளியூருக்கு அவன் போவதெல் லாம் இந்த வியாபாரத்திற்குத்தான். 7 -