பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏவுகணைகள்

53


(Helicopters) இலேசாகவுள்ள வேறு வானூர்திகளாலும் சுடப்பெறும் டாங்கிப்படையின்மீது எதிர்த்துச் சுடப்பெறும் மிகச் சிறிய இராக்கெட்டுகளாகும். இவற்றுள் பெரியவை ஒரு விமானம் போலவே தோன்றும். இவை பெரிய விமானத்தால் மேலே கொண்டு செல்லப்பெற்று இலக்கிற்குச் சுமார் 100 மைல் தொலைவில் விடுவிக்கப்பெறுகின்றன. இவை இராக்கெட்டின் திரவ எரிபொரு

படம் 23: வானத்தினின்றும் தரையை நோக்கிச்
சுடப்பெறும் எவுகணை

ளால் இயக்கப்பெற்று வேறெதுவும் தம்மைத் தொடர முடியாத வேகத்தில் உயர்ந்து சென்று பிறகு கீழ்நோக்கி இலக்கின் மீது பாய்கின்றன.

3. வானினின்றும் நீரின் கீழ்ச் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவை மேற்குறிப்பிட்ட தரையை நோக்கிச் சுடப்பெறும் ஏவுகணைகளைப் போன்றவையே. இவை கப்பலை நோக்கி, சிறப்பாக நீர் மூழ்கிக் கப்பலை நோக்கிச் சுடப்பெறுகின்றன. சாதாரணமான டார்ப்பிடோக்களில் கழற்றப்பெறக்கூடிய இறக்கைகள், பொறி, வழிகாட்டி அமைப்பு இவை அமைந்தவையே இந்த வகை ஏவுகணைகளாகும். வளி மண்டலத்தினின்றும் வீசியெறியப்பெறும் இவை குண்டுகளைப்