பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

இராக்கெட்டுகள்


விமானத்தின் திசையை நோக்கிச் சுடப்பெற்றதும் இலக்கை நோக்கித் தாமே சென்று தாக்கும். இவை எதிரி விமானம் உண்டாக்கக்கூடிய இயந்திர ஒலியினுக்கோ அல்லது அது வெளிவிடும் வெப்பத்திற்கோ ஏற்றவாறு இயங்கி அந்த விமானத்தைத் தாக்கவல்லவை என்பதே. homing என்ற சொல்லின் பொருளாகும். இந்தப் பிரிவில்

படம் 22: வானத்தினின்றும் வானத்தில் சுடப்பெறும் ஏவுகணை

வேட்டைப் பருந்து (Falcon),பக்க ஊடுருவி (Side winder} என்னும் இரண்டு ஏவுகணைகள் உள்ளன. ஆனால், சிட்டுக் குருவி (Sparrow) என்னும் ஏவுகணை வேறொரு வகையானது. அஃது இராடார் ஒலிக்கற்றையில் செல்லுமாறு அமைக்கப்பெற்றுள்ளது. அஃது அதனைவிட்டு விலகிச் சென்றாலும் மீண்டும் அந்தக் கற்றைக்குள் வந்துவிடுமாறு' அமைக்கப்பெற்றுள்ளது. எனவே, இராடார் ஒலிக்கற்றை இலக்கைப் பின்தொடர்வது போலவே இந்த ஏவுகணையும். அந்த இலக்கைப் பின்தொடர்கின்றது.

2. வானினின்றும் தரையில் சுடப்பெறும் ஏவுகணைகள் : இவை ஓர் இராக்கெட்டு அல்லது ஜெட்டினால் ஏவப்பெறுகின்றன. இவற்றுள் மிகச் சிறியவை ஹெலிகாப்டர்களாலும்