பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அப்போலோ -9

61

விலடிமீர் ஷதலோ {Vladimir Shatalov) என்பார் இருந்த சோயுஸ்-4 கலத்தினுள் நுழைந்து கைகுலுக்கி மகிழ்ந்தது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது.[1]

அம்புலி ஊர்திக்குள் துழைவதற்கு முன்னர் தாய்க் கலமாகிய கட்டளைப் பகுதியுடன் மூக்கோடு மூக்காக இணைந்திருந்த அம்புலி ஊர்தி சரியாக இயங்குகின்றதா என்பதைச் சோதித்தார் மெக்டிவிட். அவர் அதற்காக அம்புலி ஊர்தியின் ஏவுகணைப் பொறியை பல தடவை இயக்கிப் பார்த்தார், காற்றில்லாத சூனியக் குளிர்மண்டலமாகிய விண்வெளியில் மூன்று நாள் வாளாவிருந்த அந்தப் பொறி சரிவர இயங்

படம், 13 விண்வெளி வீரர்கள் சேய்க்கலத்தினன்றும் விண்வெளியில் நடந்து சென்று தாய்க்கலத்தை அடைவதைக் காட்டுவது

கியது. சந்திரனின் தரையிலிறங்குவதற்கு இந்தப் பொறிதான் பயன்பட வேண்டும்.


  1. 'சோயுஸ்' என்றால் இரஷ்ய மொழியில் இணைப்பு என்று பொருள்.