பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67



கட்டாயப்படுத்திச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டார். கோசலை


அம்மாள் கடைசிவரை வைராக்கியமாகவே மறுத்து விட்டாள்,


நடந்த நி க ழ் ச் சி யி ன் நிழலில் ஒண்டியிருந்த மாமல்லனுக்குத் தன்னறிவு ஏற்பட்டது.


மூன்று நாட்கள் கழித்து நடக்கவிருக்கும் மேகலையின் திருமண விழா மாமல்லனின் நெஞ்சில் நெருப்பை இட்டது. இதயம் எரிமலையானது. காலப்பாதையில் நடைபயின்ற சம்பவங்கள் நடந்து சென்ற வழியிலேயே மீளவும் அடியெடுத்து வைக்கத் தொடங்கின. அற்புதமான் எண்ணங்களின் பிடியில் -அழகான நிகழ்ச்சிகளின் ஆட்சி யில் அவன் கட்டுண்டிருக்கையில், அவனுக்கு அலாதியான காட்சியொன்று மனத்திரையில் நிழலாடிற்று. அது இறந்த காலத்தைச் சுட்டிக் காட்டியது வண்ணம் கலையாத புத்தம் புதிய பேசும் ஓவியமாகத் தோன்றியது கடந்த காலம். வருங்காலத்திலும் அவனது கற்பனை கால் பதிந்தது. பிரசவ அறையில் கிடத்தப்பட்டிருக்கும் பிள்ளைக் கனியமுதின் கொள்ளை அழகைப் போலவே எழில் பூத்து விளங்கியது. மாமல்லனின் உயிரில் மேகலை யின் உயிர் மறைந்திருப்பதை அவன் அறிந்திருப்பானா ? பின் ஏன் உள்ளங்குலைந்தான்....?


ஆனால், இவ்விதமான கால எல்லைக் கோடுகளுக்கு இடையில் அவனுடைய சிந்தனை ஊடாடிய தருணத்திலே அவன் இதயம் ஊசலாடத் தொடங்கிவிட்டது. உற்றவர் கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் வீடுகளில் நினைவூட்டிக் கொண்டிருந்த மேகலை-திருமாறன் கல்யாணவிழா மடல் திரைப்படங்களில் காட்டப்படும் பேய் போல உருவெடுத்தது. தசாவதாரம் புராணப்புத்தகங்களில் சாமான்யமான ஒரு செயலேயாகும் ஏன் தெரியுமா ? நடைமுறை வாழ்க்கையில் ஒரே மனிதன் ஒரே காலத்தில்