பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哑4


விழுப்புரத்தில் வண்டி ஒய்வு கொள்ளப் பதினைந்து நிமிஷங்கள் தேவைதானே? -


இருந்த அடைசல் போதா தென்றும் இன்னும் இருவர் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டார்கள், புதுமணத் தம்பதி களின் முத்திரை இருந்தது. புதுமணப் பூரிப்பு இருந்தது தாழம் பூவின் அழகும் வாசனைத் தைலத்தின் வாடையும் அவர்களுக்குத் துணை நின்றன.


புதுக் கணவனும் புது மனைவியும் இடம் தேடிக் கொண்டிருப்பதைக் கூடச் சட்டை செய்யாமல் உருவி ஒடும் சாட்டையைப் போல வண்டித் தொடர் நீண்டு விரைந்தது. வாழ்க்கைப் பங்காளிகளுக்கு உட்கார வழி செய்ய எண்ணினான் மாமல்லன் . ஆகவே, உட்கார்ந் தவன் எழுந்தான். பெரியவர் ரங்கரத்தினமும் உடன் எழுந்தார். அவரை புது இணை நிற்கவிடவில்லை, அவர்கள் இருவரும் ஒட்டி உட்காரலானார்கள். ஒட்டும் இரண்டு உள்ளங்கள் அல்லவா?.


மேகலையின் நினைவும் நிழலும் அவனுக்குக் குழப்ப நிலையைப் பரிசளித்தன. கண்ணில் தெரிந்த புதுச் செவ்வந்திப் பூவின் அழகு கண்ணில் தெரிய மறுத்த கை படாத ரோஜாவின் எழிலை எண்ணத் தூண்டியது எண்ணினான். சிந்தை பறிபோனது. இதயத்தில் சூன்யம் ஆடரங்கம் அமைத்தது. மேகலையின் பொற் பாதங்கள் “கலீர், கவீர்” என்று நாதம் சேர்த்தன, சிலப்பதிகார தம்பதிகள் போன்று அதிசயத் தம்பதியாக வாழவேண்டு மென்று கனவு கண்ட நெடுங்கதை சிதைந்த சிற்பம்போல, சீரிழந்த குடும்பத்தை ஒப்ப, புகழ் மறைந்த நட்சத்திரம் மாதிரி தெரிந்தது. கண்ணாடிக் கதவைக் கீழே தள்ளி விட்டு, ஜன்னலின் மடியில் உட்கார்ந்தான் மாமல்லன் ஒடிந்த உள்ளம் உடலைத் தளர்த்தி விட்டது ரத்த இழப்புக்கு உள்ளான நோயாளி போன்ற ஓர் உணர்வு அவனையும் மீறி எழத் தொடங்கிற்று. வெளியுலகை