பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

フ


உள்ளதெலாம் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவதுண்டோ ? - மனமே !’


மனிதன் ஒன்று நினைக்கிறான். ஆனால் தெய்வம் வேறொன்று நினைக்கிறது, அதாவது, மனிதன் நினைப் பதற்கு நேர் எதிரிடையாக தெய்வம் எண்ணுகிறது. நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறொன்றாகவும் முடிவு நிர்மாணிக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் விளை வாக, மனிதன் மனிதனாகவும் கடவுள் கடவுளாகவும் அமைந்து விடுகிறார்கள். மனிதனுக்கும் ஆண்டவனுக்கும் இடைவெளியிலே தொல்ை தூரம் பரப்பளவைச் சொல்லு கிறது. கற்பனைக்கும் எட்டாத மாயப் பெருவெளி திரை யாக அமைகிறது விதி, மாயை, இயற்கை, தெய்வம், ஜாதகம், தலையெழுத்து போன்ற அழகான சொற்கள் கோணத்துக்குக் கோணம் மறைந்து நின்று குரல் கொடுக் கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமான வார்த்தைகளின் உடும்புப் பிடியில் அவரவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். பூகோள சாஸ்திரத்தையும் விஞ்ஞான நூலையும் இடை விட்டுத் தன் போக்கில் சுற்றுகிறது உலகம், வாழ்க்கை வளையத்தில் மனிதன் ஊசலாடுகிறான். அவன் காலப் போக்கில் அறிந்து வியக்கும் உண்மை இது : நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைத்து விட்டதே ‘


மாமல்லன் சாதாரணமான ஒரு மனிதன், அசாதார ணமான தெய்வத் திருவிளையாட்டிலே புதிர் என்னும் சொற் சிலம்பக் கூத்துக்குச் சாட்சி சொல்ல உருவாக்கப் பட்ட சாதாரணமான-மிக மிகச் சாமானியமான ஒரு