பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50



யிருந்தாள். தாயே, உன் தவமும் கனவும் பலித்தது போலவே என் கனவும் தவமும் நிறைவேறுமென்று மனக் கோட்டை கட்டியிருந்தேனே ?. கடைசியில், என்னையே நான் அழித்துக்கொள்ள வேளை பார்த்திருக்கும் அளவுக்கு என்னை ஆளாக்கி விட்டாயே..? என் கனவு அழிந்த போதே நானும் அழிந்த மாதிரிதானே ? நான் அழிந்து விட்டால், என் அத்தானும் அழிந்து விடுவாரே !. இனி நான் என்ன செய்வேன்? என் அத்தான் என்ன செய்வார்? எங்கள் மனம் ஒன்றுபட்டது போலவே ஜாதகக் குறிப்புக் களும் சரிவரப் பொருந்தியிருக்கலாகாதா 7...


முத்துச் சுடரொளியில் உலக மாதாவின் அருட் புன்னகை பளிச்சிட்டது.


பித்தம் பிடித்துச் சித்தம் தடுமாறியவள் கணக்கிலே மேகலை சிலையென மலைத்து நின்றாள். கூப்பிய கரங்கள் பிரிந்தன. கண்ணிரின் கூக்குரலுக்கு அவள் காது கொடுக்க மறுத்தாள். அழுங்கள். நன்றாக அழுங்கள். படைத்தவனின் மனத்தைக் கழுவி அவன் உள்ளத்தில் பச்சாதாபம் உண்டாக்கவாவது அழுங்கள், உங்களிடம் கடைசிச் சொட்டுக் கண்ணிர் வற்றுமட்டும் கதறிக் கதறி அழுங்கள். கண்ணிரை வைத்துச் சொக்கட்டான் ஆடும் ஐயனுக்குக் கண்ணிரை வ ர ல ைழ க் கு ம் வரை ஓலமிட்டுப் புலம்புங்கள்!...... 3 * - -


பச்சைக் குழந்தையின் மேனியின் பாவனையில் மிருது வாகயிருந்தது அந்தத் திருமண மடல் தங்கரேக்கு வண்ணம் கொண்ட எழுத்துக்கள் மேகலையைச் சுட்டெரித்தன. அவள் கடுநோக்கினை வீசினாள். திருநிறைச் செல்வி மேகலை’க்கு அருகாமையில் இடம் பெற்றிருந்த திருநிறைச் செல்வனின் பெயரைப் படிக்க மனமுறுகினாள். வெடித்த நெஞ்சம் வடித்த ரத்தத்துளிகளை உலரவிடப் படுக்கையில் சரண் புகுந்தாள் மேகலை.