பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46



‘என் கனவு பலித்துவிடுமென்பதற்கு அடையாளமாக இந்தச் சிரிப்பு ? இல்லை என் திட்டத்தை நினைத்து நையாண்டி செய்கிறதா அந்த விதி ?”


காலமும் தூரமும் மெய்யென்று வீசிப் பறந்த கொடி யில் தெரிந்த கேள்வி இது தான், அப்படியென்றால்


to a y


காதலும் கனவும் பொய்தானா ?


தனித்த ஒர் உலகத்தின் பாதத்தில் ஒண்டியிருந்தான் மாமல்லன், அவனது உலகம் அவனை ஒய்வெடுக்குமாறு அனுமதித்தபோது, அவனுக்கு வெளியுலகம் சிந்தையில் சூடேற்றியது. பெரியவர் ஏதோ ஜாதகக் குறிப்புக் களை வைத்து உன்னிப்பாகப் புரட்டிக் கொண்டிருந்தார்.


‘தம்பி, ஒரு பெரிய அதிசயம் ஒன்று என் வாழ்க்கை யில் நடந்தது. அது ஞாபகம் வந்தது உடனே நான் எங்கேயோ பறந்து போனேன் நான் என் மாமன், மிகளைக் கவியாணம் செய்து கொள்ள விரும்பினேன், என் மாமா பெண்ணுக்கு என் பேரில் ரொம்பவும் இஷ்டம். மாமாவின் கண்ணில் வேறொரு பணக்காரப்புள்ளி தட்டுப் பட்டு விட்டது. எங்கள் இருவர் ஜாதகமும் பேஷாகப் பொருந்தியிருந்தன. ஆனால் அவை பொருந்தவில்லை யென்று மாமா பொய் சொல்லிவிட்டார்.


நான் வேறு இடத்தில் எங்கள் குறிப்புகளைக் காட்டி னேன். வாஸ்தவமாகவே அவை பொருந்தியிருக்கும் விஷயத்தையே தான் அந்த ஜோஸ்யரும் சொன்னார். கடைசியில் நான் ஒற்றைக் காலால் நின்று என் மாமன் மகளைத்தான் கட்டிக் கொண்டேன். என்னவோ, காலம் நிற்காமல் ஓடி விடுகிறது. ஆனால் காலம் பழக்கப் படுத்தி விட்டிருக்கும் சில அனுபவங்கள் மட்டும் ஓடாமல் நின்று விடுகின்றனவே, தம் பி.?”


நிதானமாகப் பேசினார் அவர், மாமல்லனின் மனம் அங்கு இருந்தால் தானே?