பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

觀트


‘காதலினால் மானுடர்க்குக் கவிதையுண்டாம் ; கானமுண்டாம், சிற்பமுதற் கலைகளுண்டாம் ! !


‘அத்தான் ‘ என்று அழைத்து அவனை பூவுலகுக்குக் கொண்டு வந்து நிறுத்தினாள் மேகலை.


மாமல்லனின் நேத்திரங்கள் அகல விரிந்தன. ஆழியும் கலங்கரை விளக்கமும் ஆதரிசப் பொருள்களாகத் தோன்றின,


மேகலை கீழே குனிந்தாள். கடற்கரை மணலில் கை விரல்களை அழுத்தினாள். ‘முத்துக்களைச் சிந்தி விட்டீர்களே அத்தான்’ என்று கேட்டாள் அவள்.


“மேகலை, அதோ பார் ! பேசும் உன் கயல் விழி களைக் கண்டு பொறாமை மிகக் கொண்டு கடல் மீன்கள் தாவித் தாவி ஆழத்தைத் தேடி ஓடுகின்றன ! இங்கே பார். பேசும் பொற்சித்திரங்கள், பேசிக் கொண்டிருக்கும் உன் விழிக் கணகளின் காந்த சக்தியின் முன் வாய் புதைத்துக் காணப்படுகின்றன. கடல், கலை, கனவு ஆகிய இம்மூன்றும் என்னை தன்னிலைக்குக் கொண்டு வந்த போது, இவ்வாறு நீர் முத்துக்களைச் சிந்துவதன் மூலமாகத்தான் அவற்றுக்கு நன்றி தெரிவிக்க எனக்குத் தெரிந்தது.


மாமல்லனின் முகத்தில் புன்ன கை கோலம் செய்தது.


மேகலையின் வதனத்தில் விழிநீர் கோடு கிழித்தது.