பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
45




நோக்கித் தலையை நீட்டினான். விண்ணில் அங்கங்கே ஒன்றிரண்டு உடுக்கள் சிதறிக் கிடந்தன. பல்லாங்குழிப் பலகையில் வீசியெறியப்பட்ட சோழிகள் போலே. எட்டிப் பிடிக்கத் துடித்தான். மனிதத் தன்மையின் பலஹlனம் அடைந்த தோல்வியைக்கண்டு கைகொட்டிச் சிரித்தது விண்மீன் ஒன்று. அத்தான் !” என்ற பெண் குரல் கணி ரென்று கேட்டது. விண்ணை நோக்கினான். யாரையும் காணவில்லை. மண் தன்னை யாரென்று சொன்னது. குனிந்தான், வெள்ளக்காடாகத் தோன்றியது, மேகலை!” என்று கூப்பிட்டவன் பயந்து நடுங்கிக் கொண்டு அங்கிருந்து இறங்கி நின்றான். துளிர்த்திருந்த வேர்வைக்கு வாழ்த்துக் கூறிவிட்டு, நிமிர்த்த சடுதியில், அபாய அறிவிப்புப் பலகை தெரிந்தது.


புயலிடை அமைந்த ஹரிக்கேன் விளக்கு நடுங்கியது.


‘என் வாழ்க்கைப் பயணத்துக்கு ஏற்பட்டிருப்பது இதே மாதிரி அபாய அறிவிப்புத்தானா?... காரணமின்றிக் கைப்பிடியை இழுத்து, ஒடும் வண்டியை நிறுத்தி ஐம்பது ரூபாய் தெண்டம் அழுதுவிட்டால், தலை தப்பிவிடும். ஆனால், மேகலையின் ஜாதகக் குறிப்பு காட்டிய அபாய அறிவிப்பு என்னை எப்படிப் பாதிக்கும் ? நானும் மேகலை யும் எங்கள் ஜாதகங்களைத் தள்ளி வைத்து விட்டு நாங்கள் ஒன்று சேர்ந்து விட்டால் - அப்புறம் அந்த அபாய அறிவிப்பு எங்களை என்ன செய்ய முடியும் ? என்று பல வாறாக நினைத்து ம ன த் ைத விழி வெள்ளத்தால் கழுவினான்.


மூளை நரம்புகள் அறுபட்டு குருதி புரண்டெழத் தொடங்கி விட்டதோ ?- மாமல்லனின் இதயம் அழுதது மேகலைக்கென ஒதுக்கப்பட்ட அந்த இதயம் அழுதது.


அப்பொழுது வாய்விட்டுச் சிரித்த நகைப்பொலி அவனது செவிகளில் உராய்ந்தது.