பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{}5


கனிவு மொழியன்றிக் கடுஞ் சொல் எதையும் கேட்டிராத செவிகள் அவள் சார்பில் வருந்தின. சோற்றுக் கையினால் வலது கன்னத்தைத் தாங்கியபடி அவள் படியிறங்கிவிட்டதை மாடிப் படிகளில் பதிந்து விலகிய மெட்டியொலி அறிவித்தது.


மனத்தின் நுண்ணறிவு தடம் புரண்டு விட்டதாக ஒர் உணர்வு மாமல்லனுள் சிலிர்த்தெழத் தொடங்கியது.


கண்களை மலர பல்லர விழித்தவாறு நின்ற குலோத்துங்கனின் பித்தம் தெளிந்து விட்டது போலத் தெரித்தது.


‘ஐயா...ஐயா...அது என் உருவப்படம்’’.


முன்னாடி வந்த குலோத்துங்கனின் கைக்கு முன்னோடி யாகத் தூது வந்த சொற்கள் இவை.


எடுத்த படத்தைச் சட்டைப் பைக்குள்ளே திணித்தான் மாமல்லன். வலது கைவிரல்கள் சட்டையின் கழுத்துப் பட்டையை நெருடிக் கொண்டிருந்தன.


‘என் படத்தை கொடுங்க, ஐயா !” என்று மீண்டும் நினைவுக் குறிப்பை வெளியிட்டான் குலோத்துங்கன்.


மாமல்லன் எதையும் சட்டை செய்யவில்லை சட்டையில் விளையாடிய விரல்கள் சுருள் அலைபடிந்த தலைமயிரை மேலும் சுருட்டியவாறு இருந்தன.


பறந்து சென்ற பைங்கிளியின் இதயத்துள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து அவளது தூய்மைக்குத் தீக்குளிச் சோதனை நடத்த முயற்சி செய்து கொண்டிருந்த மாமல்லன், எதிரே எழுந்து நின்ற குலோத்துங்கனின் வேண்டுகோளை காதுகளில் தேக்காமல், தன் போக்கில் மாடிக்கைபிடிச்