பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56



  • வாங்க மாப்பிள்ளை’ என வரவேற்றபடி சோமசுந்தரம் உள்ளே நுழைந்தார்.


ஒரே வினாடியில் மாமல்லனும் திருமாறனும் திரும்பிப் பார்த்தார்கள். ஆனால் திருமாறனின் முகப்பொலிவில் ஆமாம்!’ என்ற இணக்க பாவம் அழுந்தியிருந்தது. மாமல்லனுக்குக் கிடைத்த பலன் வழக்கம் போலக் கண் ணிர்.


திருமாறன் ஆசனத்தில் அமர்ந்தான்.


மாமல்லன் நின்ற இடத்திலேயே நின்றான். கனவுத் தளம் கால் பட்டுச் சிதைந்ததுபோல ஏமாற்றம் அடைநி தான்.


  • உட்கார், மாமல்லா !” என்று இரண்டாம் பட்ச மாகத்தான் சோமசுந்தரத்தால் உபசரிக்க முடிந்தது. சோமசுந்தரம் வாசலில் நின்ற காரை நோக்கி நடந்தார். உள்ளே திருமாறனின் தந்தை பள்ளிகொண்டிருந்தார். சரி, இப்போது உறக்கத்தின் தலையில் கை வைக்கக்கூடா தென்று திரும்பிவிட்டார். சில நாட்களுக்கு முன்னதாக மாப்பிள்ளை வீட்டினர் பெண் பார்க்க வந்தபோது ஏற் பட்ட அலுவல்கள் அவருக்கு நினைவில் எழுந்தன. “இன்னும் நாலுநாள் தானே இருக்கு மேகலை கல்யாணத் துக்கு?’ என்று எண்ணமிட்டார், பரபரப்பும் பதட்டமும், ஏற்பட்டன.


நாழிகை வட்டம் அப்பொழுது தெரிவித்த நேரம் மணி ஒன்பது நிமிஷம் நாற்பத்தி மூன்று.


ஜெயங்கொண்ட சோழபுரம் பஸ் அடுத்த தெருத் திருப்பத்தில் ஊளையிட்டு மறைந்தது.


மாமல்லன் கண்கள் மூடி மூடித் திறந்தான். சிறிது பொழுதுக்கு முன் அவன் கண்ட கனவின் நினைவு உந்திக்