பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பெரும்பான்மை வாக்காளர்கள் அவன்பால் ஆதரவு காட்ட வில்லை. இக்குறையை நீக்குவதற்குச் சில அரசுகளில் மறு தேர்தல் ஒன்று நடத்துகிருர்கள். முதல் தேர்தலின் முடி வில் ஒட்டுகளே அதிகமாகப் பெற்ற முதல் இரண்டு அபேட் சகர்களைத் தவிர மற்ற எல்லோரையும் நீக்கிவிட்டு மீட்டும் தேர்தல் வைத்துப் பெரும்பான்மை ஒட்டின்படி இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கிருர்கள். இம்முறையினல் பணச் செலவு அதிகம்ாகும்; திருப்திகரமான பயனும் உண்டாவ தில்லை. - - பல பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு ஸ்தலத் தொகுதித் தேர்தல் முறை சாதாரணமாக வழக்கத்தில் இல்லை. இதற்கு முக்கிய காரணங்கள் எல்லாப் பிரதிநிதிகளுக்கும் வாக்காளர் களுடன் அவ்வளவு நேர்முகமான தொடர்பு ஏற்பட முடியா தென்பதும், ஒரு பிரதிநிதிக்கும் தனிப்பட்ட பொறுப்பு இராது என்பதுமேயாம். . . . . . ஒரே பிரதிநிதியைக் கொண்ட ஸ்தலத் தொகுதித் தேர் தல், முறையினல் தக்கவாறு பிரதிநிதித்துவம் ஏற்படுவ ಕ್ಲಿ `...... நிதித்துவ முறை : ಶ అు மாத்திரமே ஒரு - . . தொகுதியில் இருக்கும் ஜனங்களுக்குள் பொது விஷயங்களில் ஊக்கம் உண்டாவதில்லை யென்பதும் சமீப காலத்தில் பலரிடம் ஏற்பட்டிருக்கும் அபிப்பிராயம். ஸ்தல வாசத் தொடர்பைவிடத் தொழில் தொடர்பு உண்மை யான சமூகக் கூட்டுறவை ஏற்படுத்தக் கூடுமாகையால், தொழில்களே அடிப்படையாகக் கொண்டு தேர்தல் தொகுதி களைப் பிரிப்பதே மேலானது என்பது அவர்களின் கொள்கை. ஆனால், இம்முறையை அநேகர் பலமாய் எதிர்க்கிருர்கள். தொழில்வாரித் தொகுதிகளினல் ஜன. சமூகத்திற்குத் தீமை விளேயும்; தேசிய ஒற்றுமைக்குக் கேடு வரும்; தொழிற் சங்கங்கள் ஒன்ருேடு ஒன்று போட்டி யிடும்; வகுப்புச் சண்டை மேலும்மேலும் முற்றிவரும். இக் காரணங்களால் த்ொழில்வாரித் தொகுதித் தேர்தல் முறை. சற்றும் கூடாது' என்ற அபிப்பிராயம் தலைதுாக்கி நிற்கிறது. 80