பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரம்ப அரசியல் நூல் பட்ட கோஷ்டியாக மாறிவிடுகிறது. சட்டசபை கூடு வதற்கு முன்பு, ஓர் அரசியற் கட்சியிற் சேர்ந்துள்ள சட்ட சபை அங்கத்தினர்கள் ஒன்றுகூடி, ஆலோசனைக்கு வரும் பிரச்னைகளைப்பற்றி விவாதம் செய்து சில முடிவுகளுக்கு வந்துவிட்டால், பின்பு சட்டசபையில் பகிரங்கமாக நடை பெறும் விவாதத்திலோ, ஒட்டுக் கொடுப்பதிலோ கட்சி அங் கத்தினர்கள் ஒரே கட்டுப்பாடாய்க் கடசித் தீர்மானக் தையே ஆதரிக்க வேண்டியவர்களாகி விடுகின்றனர். மீறி நடப்பார்களாயின் கட்சியிலிருந்து நிச்சயமாக நீக்கப்படு வார்கள். இம்முறைக்குக் காக்கஸ் ஆட்சி என்று பெயர். - இதன்படி சுதந்திரம் என்பதே இல்லை. தலைவர்கள் இட் டதுதான் சட்டமாக இருக்கிறது. - மேலும், கட்சியை ஆதரிப்பவர்களுக்கு மாத்திரமே பதவியும் உத்தியோகமும் அளிப்பது என்ற முறையினல் விளையும் தீமைகள் மிகக் கொடியவை. சில சுயநலக்காரர் கள் அரசியலில் தலையிட்டுப் பொதுநல நோக்கமே இல்லா மல் பொதுமக்களை ஏமாற்றிச் சுரண்டிவர இடம் தாராள மாக ஏற்பட்டுவிடுகிறது. தவிரவும், எதிர் கட்சித் தலைவர் கள் எவ்வளவு திறமை படைத்தவர்களாயிருப்பினும் அர சாங்க வேலையில் சேர்ந்து உழைக்க முடிவதில்லை. இதனல் அவர்களின் அனுபவமும் திறமையும் தேசத்திற்குப் பயன் படாமலே iணுய்ப் போகின்றன. அவர்கள் பயனில்லாத சட்டசபை விவாதங்களிலும் கட்சிப் போர்களிலும் காலங் கழிக்கும்படி நேரிடுகிறது. . . . . ". அரசாங்கக் கட்சியை எப்போதும் எதிர்ப்பது தான் கட்சி ஆட்சியின் தர்மம் ஆகையால், அரசாங்கத்தார் கொள் கையும் திட்டமும் ஒரு விஷயத்தில் தேச நன்மைக்கு எவ் வளவு ஏற்றவையாயிருந்தாலும் எதிர்க்கட்சியினர் எதிர்த் துத்தான் பேசுவார்கள். அவர்கள் எதிர்ப்புக்கு அர்த்தமும் இல்லை; அதனால் யாதொரு பலனும் உண்டாவதில்லை. ஒரே கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூடத் தங்கள் அபிப்பிராய பேதங்களை இஷ்டம்போல் சட்டசபையில் வெளியிட இயலு வதில்லை. ஒட்டுப் பலம் பெறுவதற்காக வேண்டி நிறை 136