பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஸ்தல ஸ்தாபன ஆட்சி பிரதிநிதியாக இருந்து ஸ்தல உரிமைகளையும் சலுகைகளையும் . . . . . . பாதுகாத்து வருவது ஒன்று. ஸ்தல விஷயங் களில் மத்திய அரசாங்கத்தின் ஊழியனாக இருப்பது மற்றென்று. மத்திய அரசாங்கம் ஸ்தல விஷயங்களில் அளவுக்கு மிஞ்சியோ அடிக்கடியோ தலையிடாமல் பார்த்துவர வேண்டியது மிக அவசியம். ஆட்சிப் பொறுப்புகள் எல்லாம் ஒருங்கே மத்திய அர சாங்கத்தினிடம் இருக்கும் அரசுக்கு உதாரணம் பிரான்ஸ் தேசமே. அங்கே ஸ்தல சுய ஆட்சி மிகக் குறைவு ; அதுவும் மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்புக்கு உட்பட்டது. ஆகையில்ைதான் பிரெஞ்சு மக்கள் சமீபகாலத்தில் ரீஜியனலிஸம் என்னும் ஸ்தல ஆட்சி முறையில் ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இம்முறைப்படி ஸ்தல சுயஆட்சி பலவிதமாய் இருக்கவேண்டும். ஒரு ஸ்தலத் தொகுதியில் இருக்கும் தொழிற் சங்கங்கள் எல்லாவற்றுக்கும் சுய ஆட்சி கொடுக்கப்பட வேண்டும். மத்திய அரசாங்கத்திற்கும் ஸ்தல ஸ்தாபனங்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு தக்க வண்ணம் அமைந்தால் நல்ல பயன்கள் விளையும். தங்களுக்குள்ள மத்திய அரசாங் பல வேலைகளையும் கடமைகளையும் சரியாய் சத்திற்கும் இதில் நிறைவேற்றிவர ஸ்தல ஸ்தாபனங்களுக்குப் அதிகாரங்களும். வேலைகளும் ಘೀ; போதுமான வசதிகளும் பலமும் இருக்க ஆ வேண்டும். ஆனல் மத்திய அரசாங்கம் - அவற்றின்பால் உள்ள பலவகைப்பட்ட வேலைகளேயும் ஒப்புநோக்கித் தணிக்கைச்செய்து, தன் உத்தி யோகஸ்தர்களைக் கொண்டு கண்காணிப்புச் செய்துவர வேண்டியது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் எல்லா ஸ்தலத் தொகுதிகளின் நிர்வாக ஆட்சியும் ஒரே தரமான தாகவும் பரஸ்பர ஒற்றுமை பெற்றதாகவும் இருக்கும். ஸ்தல ஸ்தாபனங்களுள் ஒவ்வொன்றின் அனுபவமும் ஒவ்வொரு விதமாயும் குறுகியதாகவும் இருக்கும். பல ஸ்தல ஸ்தாபனங் களின் வேல்களையும் பரிசீலன் செய்துவரும் மத்திய அரசாங் கம் வெவ்வேறு இடங்களிலிருந்து உணரும் அனுபவ பூர்வ 108