பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94



அவன் ஆ.வில்லை ; அசையவில்லை. சுற்றும் முற்றும் ம்பினாள் அவள் கவனிப்பாரற்றுக் கிடந்த மூங்கில் யை கவனித்து எடுத்து வந்து, அதைக்கொண்டு அந்த வாலிபனை ஆங்கிருந்து விரட்ட யத்தனம் செய்யத் தொடங்கின சமயத்தில்தான் “மேகலை !’ என்ற கூப்பாடு விழுத்தது.


குரலுக்குடையவன் மாமல்லன் என்பதை உணர்ந்தாள் அவள். கைகம்பு நழுவியது. நாலு தப்படி தள்ளி நின்றாள் மேகலை,


அந்த அதிசய மனிதன் அவர்கள் இருவரையும் விழி பிதுங்கப் பார்த்தான்,


மாமல்லன் அவ்வாலிபனை ஆழ்ந்து நிலைத்த கண் களால் ஊடுருவினான். யார் இந்த ஆள் ?’ என்ற கேள்வி புறப்பட்டு எதிரொலித்தது. அதற்குள் அவனுடைய நினைவில் வேறொரு எண்ணம் பளிச்சென்று மின்னியது: சிந்தாமணி ராத்திரி பேசிக்கிட்டிருந்தது இவனோடுதான் போல என்று எண்ணிக் கொண்டான் . பிறகு அவனை நெருங்கினான். நீங்கள் ...’ என்றான்.


“நீங்கள் ? என்ற கேள்விக் குறியைத் தாங்கிக்கொண்டு சிரித்தான் அவன்-னர் பேர் தெரியாத அவன்.


மறுபடி அதே வினா நீண்டது. நீங்கள் !” “என் அத்தான் அவர் !”


மாமல்லன் விசுக்கெனத் தலையைத் திருப்பினான்.


சிந்தாமணி !


“சிந்தாமணி. உன் அத்தான் இவர்தானா ?”


நேத்திரங்கள் உருண்டோடவிட்ட நீர்த்துளிகள் ‘ம்’ கொட்டின.