பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரதிநிதித்துவம் இவ்வகுப்புவாரி முறையில் சில நல்ல அம்சங்கள் இருக் கின்றன. ஒரு சிறுபான்மை வகுப்பினருக்குரிய சில தனி . உரிமைகளுக்கும் சலுகைகளுக்கும் பாது ఫి: காப்பு ஏற்படுகிறது; சட்ட சபையில் அவர் மை தீமைகள் களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் - உண்டாவதுடன் வகுப்பை ஒன்றுபடுத்திக் கல்வி அபிவிருத்தி, தேசத்தொண்டுகள் முதலியவைகளுக் கேற்ற அதிக வசதிகளை இம்முறை அளிக்கக்கூடும். ஆல்ை இதல்ை ஏற்படும் கொடிய தீமைகள் பல. இவ்விதமான பிரதிநிதித்துவம் சரித்திர அநுபவத்திற்கு விரோதமானது. தேசப் பொதுகன்மையைக் கருதில்ை, ஜாதிமத வித்தியா சங்க ளெல்லாம். அரசியல் விஷயங்களில் நுழையக்கூடா என் பதுதான் இங்காள் அரசுகளின் கொள்கை. பிற தேசங்களி லெல்லாம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கை கை விடப்பெற்று, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையே. இப்போது நடைமுறையில் இருந்துவருகிறது. இந்த வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ முறை வகுப்புவாத உணர்ச்சியையும், குறுகிய மனப்பான்மையையுமே நீடிக்கச் செய்யும். ஒரு சிறுபான்மையோர் வகுப்பு, தன் உரிமைகளையும் சலுகை களையும் கொண்டே திருப்தியடையக் கூடுமாகையால், மேன் மேலும் முன்னேற்றம் அடைய வேண்டு மென்னும் உணர்ச் சிக்குத் தூண்டுதலே இல்லாமல் போய் விடுகிறது. இச் சலுகை தொற்று நோயைப் போன்றது. ஒரு வகுப்பின ரோடு மாத்திரம் இச்சலுகை கின்றுவிடாது. பிற வகுப்பு களும் இம்மாதிரியான சலுகைகளைப் பெற வேண்டிப் போட்டி போட்டுக்கொண்டு சண்டையிடும். தவிரவும், ஒரு. சிறுபான்மை வகுப்பினர்களுக்குள்ளேயே, சின்னஞ்சிறு உட் பிரிவுகள் தோன்றித் தங்கள் வித்தியாசத்தைப் பெரிதா கப்பாராட்டி,மேலும் விசேஷச் சலுகைகளுக்காகக் கிளர்ச்சி. செய்ய ஆரம்பித்துவிடும். லமையில், இந்தியாவிற்குக்கூட அவ் மில்லாத மற்றெரு முற்ை. இருக்கின்றது. ஒரு சூட்டுத்