பக்கம்:ஆரம்ப அரசியல் நூல்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சர்வதேச கேசமும் உலக அரசும் விகிதம் முதலிய சட்ட சம்பந்தமான விஷயங்களே விசாரித்துத், தீர்ப்பு அளித்தல் முதலானவை இந்த நீதிஸ்தாபனத்தின் வேலேகளாம். சர்வ தேச சங்கத்தில் சேர்ந்த அரசுகள்தாம் கட்சிக்காரர்களாக இருக்கக்கூடும். சுதந்திரம் பெற்ற குடி யேற்ற நாடுகளுக்கும் இந்த உரிமையுண்டு. விசேஷ உடன் படிக்கைகள் மூலம் தீர்ப்புக்கு அனுப்பும் விஷயங்களில் சர்வ தேச நீதிஸ்தாபனத்திற்குச் சுயமாகத் தீர்ப்பளிக்கும் அதி காரம் உண்டு. இன்ன இன்ன விஷயங்கள் கட்டாயம் அந்த நீதிமன்றத்தினுல்தான் விசாரிக்கப்பட வேண்டும் என்று சங் கத்தின் உடன்படிக்கையில் குறிக்கப்பட் டிருந்தால், அவை களில் அதற்குக் கட்டாய அதிகாரம் உண்டு. இவைகளேத் தவிர, அஸெம்ப்ளி, கவுன்ஸில், ஐ. எல். ஒ. அனுப்பும் வியவகார விஷயங்களில் முன்யோசனை கூறுவதும் அதன் வேலைகளில் ஒன்ருகும். - சர்வதேச மகா சங்கம், சர்வதேச நீதிஸ்தாபனம் சர்வ தேசத் தொழிற் சங்கம் என்னும் மூன்றும் அடங்கிய சங்க முறை'யால், காலக்கிரமத்தில் உலக அரசுகளின் சமஷ்டி ஏற்படுமா, அல்லது உலக அரசியல் உறவு வேறு முறையில் அமையப் பெறுமா என்னும் கேள்விக்குச் சரியான பதில் அளிப்பது சுலபமான காரியமன்று. எதிர்காலத்தில் பூர்ண நம்பிக்கையுள்ள பலர், சர்வ தேச நீதிஸ்தாபனத்திற்கு ஏற்பட்டிருக்கும் செல்வாக்கையும் சர்வ தேசத் தொழிற் சங்கத்தின் முயற்சி களின் பலகை உலகத் தொழிலாளர்களுக் குக் கிடைத்திருக்கும் நலன்களையும் சுட்டிக் காட்டி, சங்க முறை தான் உலக அரசு களின் சமஷ்டி லகதியம் கைகூடுவதற்குப் பெரிதும் ஏற்றது என்று உறுதியாய்ச் சொல்லுகிருர்கள். அவர்கள் கூறுவது ஒருவிதத்தில் சரியென்று நாமும் ஒப்புக்கொள்ள வேண்டி யதுதான். சர்வ தேச மகா சங்கமும் அநேக விஷயங்களில் உலக ஒற்றுமை ஏற்படக்கூடிய முறையில் வேலை செய்து வந்திருக்கிறது. ஆனால், சமீப காலத்தில் எதியோப்பியா, சீனம், ஸ்பெயின் முதலிய நாடுகளில் உண்டான கலவரங். சங்க முறையும் உலகஅரசுகளின் சமஷ்டியும் 147