பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

; : 7


அரியலூர்.


மேகலை பெட்டியில் ஏறிக் கொண்டாள். அவளுக்கும் பக்கத்தில் கோசலை அம்மாள். மரகதவல்லி அம்மையுப் சோமசுந்தரமும் தரையில் நின்றபடி மகளுக்குப் புத்திமதி சொன்னார்கள் :


பெட்டிக்குக் கீழே நின் நான் மாமல்லன். சிந்தாமணிக் காகவும் குலோத்துங்கனுக்காகவும் அவன் காத்திருந்தான் வண்டி புறப்படவிருந்தபோது, மாமனார் வீட்டு வேலைக் காரன் ஓடிவந்து அவனிடம் ஏதோ ஒரு காகிதம் ஒன்றை நீட்டினான். வண்டி புறப்பட்டது வண்டியில் ஏறாத சித்தாமணி, குலோத்துங்கன் ஆகிய அவ்விருவருடைய டிக்கெட்டுகள் அவனுடைய சட்டைப்பையில் இருந்தன. வலது கையிலிருந்த கடிதம் உறையைக் கிழித்தபடி தலை ைநீட்டியது.


அன்புள்ள அண்ணா,


என்னுடைய சொந்த அத்தான் குலோத்துங்கன் என் சொத்து. அவருக்காகவேதான் இத்தனை காலமும் நான் உயிருடன் இருந்து சந்தேன், உயிர் மீது ஆசை வைத்தும் வருகிறேன். அவரும் நானும் தஞ்சை செல்கின்றோம் உங்கள் ஆசி எங்களுக்கு என்றும் உண்டல்லவா ?


அன்புத் தங்கை,


சிந்தாமணி.”