பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வல்லிக்கண்ணன் பன்னலம் சூழ்ந்த அம்மா பாட்டிலே நிலைத்து நிற்கும் உன்னையே வணங்குகின்றேன் உளத்தினால் போற்றுகின்றேன்; தமிழ் அன்னை தான் தனக்கு வீரமும் செயல் துணிவும் தந்து அருள் பாவிப்பதாக அவர் நம்பிக்கை யோடு போற்றி வணங்குகிறார், 'யான் வணங்கும் தெய்வ நன்மகளே! -- - - ஒப்பில்லா நற்றவத் தவமகளே! நம்பிக்கை நெஞ்சத்தால் செற்றார் மருளுமுன் செயல் துணிவைத் தந்தவளே!’ என்றும் வியப்பிற்கோர் எல்லையென நின்றாய் எங்கள் வேல்வரிசை வாள் வரிசைக் கவிதை தந்தாய் செயற்கரிய செய்கின்ற திறங்கள் ஈந்தாய் செப்பரிய மேல்நிலையில் நிற்க வைத்தாய் கயவர்கள் செய்செயலைக் காலின் துTசாய்க் கருதுகின்ற ஆண்மையெனும் வீரம் காத்தாய் புயவலிமை தந்தவளே! அறிவின் மாட்சிப் புடம் போட்ட தமிழ் மகளே வணக்கம் அம்மா!' இவ்வாறு வணக்கம் கூறியே அவர் ஒவ்வொரு கவி அரங்கத்திலும் பாட ஆரம்பிக்கிறார். ஆனால், ஒவ்வொரு முறையும் தனித்தனி விதத்தில் போற்றிக் கவிதை இயற்றிக் கூறும் அவரது கவிதையாற்றல் வியத்தலுக்கு உரியது. ஒருமுறை பாடிய வணக்கப் பாடலை மறுமுறை அவர் பாடுவதில்லை. அவருடைய தமிழ் பக்தி நவநவ மான துதிப்பாடல்களை ஆக்கும் திறனை அவருக்கு