பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 வல்விக்கண்ணன் நற்றவத்தால் தமிழறிந்த தலைவர் இந்த நாடாள வேண்டும்;ஆம்! வேண்டும்! வேண்டும் பற்றிவரு இந்திமொழி நீங்க வேண்டும் பார்போற்றத் தமிழ்முழக்கம் செய்வோம் வாரீர்!’ இன்று தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு ஏற்றம் இல்லை. ஆட்சியில், நீதித் துறையில், கல்வி நிலையங்களில் சமூக வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் தமிழ் தனக்குரிய இடத்தைப் பெற்றிருக்கவில்லை. கடைத்தெருவில் பலகை களில் தமிழ் இல்லை. இந்த இழிநிலையால் கவிஞர் உளம் கொதிப்பதில் வியப்பெதுவும் இல்லை. விழாக்களுக்குக் குறைவுண்டா? தமிழின்பத்தை விள்ளுதற்குக் குறைவுண்டா? தமிழாம் அன்னை ;ழாக் குறையாய் வாழ்வது தான் வாழ்க்கை எனற அவலநிலை தமிழ் நாட்டில் இனும் நீடித்தால் பலாப்பழமாய் ஆட்சிபெற்றுப் பயன்தான் என்ன? பயனின்றிச் சுற்றுகின்ற ஈக்களா நாம் இலாக்குறையை நாம் நீக்கவேண்டும் என்றால் இவ்வாட்சி தமிழாட்சிப் பழம் அறுப்போம்” இதை வலியுறுத்தும் வகையில், தமிழ் மக்களிடையே தமிழ்த் தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பெருங் கவிக்கோ தமிழ் நடை மறுமலர்ச்சி இயக்கத்தை நடத்தியது முக்கியமான தமிழ்ப் பணி ஆகும். எண்ணற்ற தமிழ் அறிஞர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொள்ள இந்த இயக்கம் கன்னியாகுமரியிலிருந்து தமிழகத்தின் தலைநகராம் சென்னைக்கு தமிழ் நடைப் பயணம் மேற்கொண்டது. பின்னர் தமிழ் நடைப் பயணம்