பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 வல்லிக்கண்ணன் விற்பனைப் பொருளைப் போலும் விரிஇருள் தன்மை போலும் அற்பர்கள் வாழ்வைப் போலும் அடிமையாய் மக்கள் ஆக்கிக் கற்பனைப் பொருளாய் அன்னார் காண்வளம் கெடுத்துத் தங்கள் வெற்றிகள் குவிக்கின்றார்கள் வேடிக்கை மனிதரிங்கே!' அடிமையில் மோகமும், அடிமைத்தனமும் ஒழிக்கப் பட வேண்டும். அதற்கு மக்கள் விழிப்பும் எழுச்சியும் பெற்றாக வேண்டும். கொடுமைகள் நீக்கிக் கொள்கைகள் காத்து பெரிய முன்னேற்றம் ஆக்கி, விந்தைகள் நிலைக்கச் செய்து, வெற்றி மேல் வெற்றி சேர்த்து, தந்தையர் நாட்டை ஏற்றம்தனில் நிலை நாட்டி வைப்போம் என்று முழக்கமிடுகிறார் பெருங்கவிக்கோ. பாரினில் பாரதம் மேன்மை பெற்று விளங்க நாட்டில் உற்பத்தி பெருக வேண்டும்; ஓங்கிடும் நலங்கள் எல்லாம் விற்படு குறியைப் போல மேலோங்க வேண்டும்! வேண்டும்! "அற்புதம் இந்தியர்கள் அரும்திற உழைப்பென்றேதான் பற்பல நாடும் போற்றும் பாய்புகழ் பெருக வேண்டும்’ என்று அவர் ஆசை வளர்க்கிறார். அவரது கனவுகள் மேலும் பெருகுகின்றன. - 'தன்னிறைவாக நம்மின் தாய்நாட்டு மக்களெல்லாம்