பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 போவதற்கு வேறு பல காரணங்களும் உண்டு. என்றா லும், இது முக்கியமான காரணமாகும். ஆர்வமுள்ள வாசகர்கள் குறைவாக இருக்கிறார்கள். படிப்பவர்களிலும் கவிதைகளைத் தேடிப் படிக்கிறவர் எண்ணிக்கை குறைவுதான். கவிதைகளை- அதிலும் மரபுவழிப் பட்ட படைப்புகளை படிப்பவர்கள் மிகவும் குறைவு. - - - - ஆனால் படிக்காமலே அல்லது ஒருவரின் ஒரு சில எழுத்துக்களைப்படித்து விட்டு, தடலடியாக அபிப்பிராயம் சொல்கிற இயல்பு-ஓங்கி அடித்து ஒதுக்கி விடுகிற போக்கு அதிகமாகவே வளர்ந்துள்ளது. இந்த நிலை மாறவேண்டும். வாசகர்களின், ரசிகர் களின், மனப் பண்பு நன்னிலை அடைய வேண்டும். படித்துப் பார்த்து, கருத்து சொன்னாலாவது, "பரவால்லே; போகிறது! இவர் ரசனை இப்படி... இது இவருடைய கருத்து' என்று கொள்ளலாம். ஆனால், பலரும் படிக்காமலே'அறுதியிட்டு உறுதி கூற'த் துணிவது சரியான போக்கு அல்ல. ஒவ்வொரு படைப்பாளியின் மொத்த எழுத்துக்களை யும் ஆய்வு செய்து, நல்லனவற்றை எடுத்துக் கூறும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டிருக்குமானால், இந்தப் போக்கு ஒரளவுக்குக் குறைக்கப்பட்டிருக்கும். ஆனால், தமிழ் நாட்டில் அத்தகைய விமர்சன முயற்சி ன் செய்யப்படவில்லை. இது பெரும் குறை பாடேயாகும். பெருங்கவிக்கோ என்று சிறப்புப் பெயர் பெற்றுள்ள வா.மு.சேதுராமன் அவர்களின் சாதனைகளும் இந் நாட்டில் சரிவரப் புரிந்து கொள்ளப்படவில்லை. இது வருத்தத்துக் குரியது.