பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் தமிழ்மொழிக்குப்புதுமலர்ச்சியும் புதிய வேகமும் புதிய சிந்தனைகளும் சேர்த்த மகாகவி பாரதியார், 'நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப் பொழுதும் சோரா திருந்தல்' என்று அறிவித்தார். நாட்டு மக்கள் நலமுற்று வாழவும், நானிலத்தோர் மேனிலை எய்தவும், தமது பாட்டுத் திறத்தை பயன் படுத்தினார் பாரதியார். மகாகவி பாரதியார் வழியில் அடி எடுத்து வைத்து முன்னேறி மேலே மேலே சென்று கொண்டிருப்பவர் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன. "தமிழருக்குப் புதிய வாழ்வும், புதிய எழுச்சியும்’ புதிய சிந்தனையும், உள்ளத்தெளிவும் ஏற்பட வேண்டும். என்ற இலட்சியத்தோடு கவிதை படைக்கும் கவிஞர் சேதுராமன். கண்ணெனும் தமிழே வாழ்க்கை என்பதை ஒவ்வொரு தமிழனும் உணரவும், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்யவும், இந்த அடிப் படையில் பாரதத்தையும் உலகையும் ஒன்றெனக் கருதவும் தனது எழுத்தாற்றலைப் பயன்படுத்துகிறார். காலமெல்லாம் விழித்திருந்தே கடமையாற்றும் கவிஞன் நான்’ என்று குறிப்பிடும் கவிஞர்.