பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l கலைத்துறையில் அடியெடுத்து வைக்காமலேயே, காலம் என்னை உலகுக்கு அடையாளம் காட்டியுள்ளது. - 'பெருங்கவிக்கோ-என்ற பெயரைத் தக்க வைக்கத் துணை புரிந்துள்ளது. இதனை ஏன் கூறுகின்றேனென் றால், வளரும் கவிஞர்கள் படத்துறைக்கு எழுத வேண்டும் என்றே நினைத்து ஏங்காமல்-கடுமையான கவிதைப்பணி செய்தால்-கவிதை மகள் கைவிட மாட்டாள் என்பதற்கே. நான் ஒரு இறைப்பற்றாளன் என்னுடைய முயற்சிக்கு அப்பாற்பட்டு இறைவனின் கருணையே என்றன் வெற்றிக்கு முழுக்கரணியமாகும். எல்லாப் புகழும் பெருமையும் இறைவனுக்கே. உலகமே வெள்ளத்தில் மூழ்கினால் கூட என்னுடைய நூற்கள் ஏதாவதொன்று மேலே மிதக்கும். அந்த அளவிற்குச் சுமந்து, சுமந்து உலக நாடுகளெல்லாம் என்னுடைய நூற்களை விதைத்திருக்கிறேன். பொருள் வந்தாலும். வராவிட்டாலும், என் நூற்களை நண்பர் களுக்கு வழங்குவதில் நான் சலிப்பதில்லை. என்னுடைய மணிவிழா அகவையில் நான் இரு குறிக்கோள்களை என்னுள் சுமந்து கொண்டிருக்கிறேன் என் மொழியின் பெருமை உலக அரங்கில் தெரிய ஒரு. தமிழ் எழுத்தாளன் நோபல் பரிசு பெற வேண்டும். ஒப்பரிய இப்பரிசுக்காகக் கவிதைத்தவம் செய்கிறேன். என் இன மக்களின் உன்னத நிலை உலகரங்கில் ஒளி பெற, ‘உலகத்தமிழர்களை இணைக்கும் ஒரு இணைப்பு மையம், நிறுவனம் உருவாக்க வேண்டும். இந்த இரு குறிக்கோள் களும் வெற்றியடைய என்னுடைய எஞ்சிய வாழ்நாளை ஈகம் செய்ய எண்ணியுள்ளேன். நாம் இவ்வளவு பணிகள் செய்து நம் எழுத்துக்களை உணர்வாரில்லையே என்ற ஏக்கத்தை, முதுபெரும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனாரின் இந்த நூல் நிறைவு. செய்கிறது. இந்தப் பணியை, தன் எழுபத்தைந்து அகவையிலும் தளராது எழுதி என்னை ஊக்குவித்த முது