பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

3. திரும்பத் திரும்ப பயிற்சி செய்கிற போது, அதில் தேர்ச்சியும் வளர்ச்சியும் நிறைய ஏற்படும்.

4. மாணவர்கள் விரும்பாததை வற்புறுத்தாமல், ஏற்றுக் கொள்ளச் செய்திட முயன்று, வெற்றி பெற்ற பிறகு, கடினப் பயிற்சிகளை செய்ய வைக்கவும்.

5. காரியமாற்றும் ஆர்வம், விருப்பம், முயற்சி, முனைப்பு எல்லாம் வயதுக்கேற்ப மாறுபடும் என்பதால், அதனையும் நன்றாக அறிந்து கற்பிக்கவும்.

சமூகவியல் கருத்துக்கள் (Sociology)

1. மனிதன் கூடி வாழும் சமூக அமைப்பைச் சேர்ந்தவன்.

2. சமூகத்தில் அவன் வாழ்ந்தாலும், தனது தனித் தன்மையை இழக்காமல் வாழ்கிறான்.

3. தனது உரிமையை இழக்காமல், மற்றவர்கள் உரிமையையும் பறிக்காமல், தனக்கும் உள்ள பொறுப்புக்களை உணர்ந்து, பங்கிட்டுக் கொண்டு, பக்குவமாக வாழ்கிறான்.

4. சமூகத்தில் ஒற்றுமையும் உண்டு. போட்டிகளும் உண்டு. இரண்டுமே முன்னேற்றத்திற்கு இரு கண்கள் போன்றவையாகும்.

5. ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை அமைக்க, விளையாட்டும் ஆடுகளங்களும் உதவுகின்றன.

இப்படிப்பட்ட கருத்துக்களை புரிந்து கொண்டு, ஆசிரியர்கள் கற்பிக்கும் போது, எதிர்பார்த்த நன்மைகள் எல்லாமே கிடைக்கின்றன.