பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆபுத்திரன்

5

வேத வேள்வியை நிந்தனை செய்யும் பேதையாய் இருக்கின்றாய். ஆதலால், நீ பசுமகன் என்பதற்குச் சாலவும் பொருத்த முள்ளவனாகக் காணப்படுகின்றாய்" என்று இகழ்ந்து கூறினார்கள். அவ்விதம் கூறலும் ஆபுத்திரன், "பசுவின் மகன் அசலமுனிவன், மானின் மகன் சிருங்கி முனிவன், நரியின் மகன் கேசகம்பள முனிவன்; இவர்களை நீங்கள் உங்கள் குலத்து முனிசிரேஷ்டர்களென்று சிறப்பித்துக் கூறவில்லையா? பசுவின் வயிற்றில் பிறந்ததால் வந்த இழிவு யாது? 'கள்ளி வயிற்றில் அகில் பிறக்கும்' என்ற மூதுரையை நீங்கள் அறிவீர்களோ? என்று கூறித் தன்னை இகழ்ந்த அவர்கள் வாயை அடக்கினான்.

அப்போது அங்குள்ள அந்தணர்களுள் ஒருவன், "ஒ! இவன் பிறப்பின் வரலாற்று முறையை நான் அறிவேன்; முன்னொரு நாள் குமரித் தீர்த்தத்தில் விதிப்படி மூழ்கிக் குமரித்தெய்வத்தை வணங்கிவிட்டு, வருத்தமிகுந்து, வரும் சாலி என்னும் ஒரு பார்ப்பனியைக் கண்டு, 'உன் ஊர் யாது ? நீ எதற்காக இங்கு வந்தாய்? வாட்டத்திற்குக் காரணம் என்ன?' என்று நான் கேட்டதற்கு அவள், 'யான் வாரணாசி என்னும் ஊரிலுள்ள ஆரண உபாத்தியாயன் அபஞ்சிகன் என்னும் அந்தணனது மனைவி; யானொழுகிய தீய ஒழுக்கத்தால் கணவனைப் பிரிந்து, கன்னியாகுமரிக்கு நீராடச்சென்றேன்; செல்லுகையில் பாண்டியரது கொற்கை நகரத்துக்கு அப்பால் ஒருகாத தூரத்திலுள்ள ஆயர்பாடியிலே ஆண் மகவு ஒன்றைப்பெற்று, இரக்கமின்றி அதனை ஆங்குள்ள ஒரு தோட்டத்தில் இட்டுச்சென்றேன்; இப்படிப் பட்ட தீவினையாட்டியாகிய எனக்கு நற்கதியும் உண்டோ?' என்று மிகத் துன்பமுற்று அழுதாள்; அவள் பெற்ற அந்த மகனே இவன்; இதில் சிறிதும் ஐயம் இல்லை; இதைவெளிப்