பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

37

3. விஷயங்களை விளக்குகிற போது பேசுவதோ, விரைவாகப் ஆக்குவதோ அல்லது ஆமை பொறுமையை இழக்கச் செய்வதோ கூடாது.

மாணவர்கள் புரிந்து கொள்ளும் அறிவு நிலையை அறிந்து, அதற்கே பக்குவமாகப் போதிக்க வேண்டும்.
அது போலவே, உளவியல் உரையாடல் முறையிலிருந்து விவாத முறை வரை நடத்திட வேண்டும்.

4. கற்றுத் தருகிற போதே, மாணவர்களின் கருத்தில் பதியுமாறும், சிந்தனைகள் விரியுமாறும், செயல்படுத்தத் துணிவு ஏற்படுமாறும், தெளிவு உண்டாகுமாறும் கற்றுத் தரல் வேண்டும்.

5. மேம்பாடுள்ள துணைக் கருவிகளையும், உதவிப் பொருட்களையும் பயன்படுத்துகிறபோது, மாணவர்களின் கற்கும் திறன் எழுச்சி பெறுகிறது என்பதை ஆசிரியர் என்றும் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.

6. ஒவ்வொரு கருத்தும், அந்தப் பாடத்தின் முழுமையையும் புரிந்து கொள்ளுமாறு, தொடர்புபடுத்தி, போதிக்க வேண்டும்.

7. சொல் விளக்கத்தை விட, நேரில் பொருட்களைக் காட்டி விளக்கிட வேண்டும்.

மேற்கூறிய கருத்துக்களை மனதில் கொண்டோமானால், அவற்றைத் தொடர்ந்து, அறிவார்ந்த அணுகு-