பக்கம்:இரத்தினகிரி பாலமுருகன் அந்தாதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.

38.

39.

40.

குகை எனச் சொல்லும் - இதய குறை என்று சொல்லப் படுகின்ற, தகராலயத்தில் - தராகாசத்தில். குடி இருப்பாய் - தங்கியிருப்பாய். நகை மிகு - மகிழ்ச்சி மிக்க, வள்ளி - வள்ளி நாயகியையும். தெய்வானையை - தேவானையாகிய பெருமாட்டியையும். அன்பின் - அன்போடு. நயத்திடுவாய் - தேவரீருடைய மனைவியராக ஏற்று விரும்புவாய். இகல் அரும் - ஒப்பற்ற ரத்ன கிரியினில் - இரத்தினகிரியில், பாலன் என - பால முருகன் என்னும் திருநாமத்தை யாவரும் சொல்லும்படி இருப்பாய் - எழுந்தருளியிருப்பாய். புகல் அரும் - சொல்லி முடிப்பதற்கு அரிய சீர் - சிறப்புக்களை உடையாய் - உடைய பால முருகனே நினை - தேவரீரை போற்றி - வாழ்த்தி, புகழுவன்-தேவரீருடைய புகழ்களை எடுத்துச் சொல்லித்துதிப்பேன்.

வண்மை - வளப்பம். மிகுந்த - மிகுதியாக உள்ள உடல் -

உடையோம். உடம்பை உடைய மனிதர்களும். மயானத்தில் - சுடுகாட்டில். ஏ அசைநிலை. கண்பெற - நாம் காணும்படி ஓர் பிடி சாம்பராய் - ஒருபிடி சாம்பலாகி. ஆவது - ஆவதனை, கண்ட பின்பும் - கண்ட பிறகும். நண்பு உள்ளது என்று - நமக்கு உரிமை உள்ளது

இந்த உடம்பு என நினைந்து. இந்தத் தேகத்தை - இந்த உடம்பை,

நம்பி - நிலையானதென்ற நம்பிக்கை கொண்டு, ஏ அசைநிலை. நாளும் - ஒவ்வொரு நாளும். உழைத்து - பாடுபட்டு. உண்பதை - அதனால் வரும் ஊதியத்தை கொண்டு சாப்பிடுவதை அன்றி - அல்லாமல், நீ என்றது மனத்தை. பால முருகனை - இரத்தினகிரியில் எழுந்தருளியுள்ள பால முருகனை. ஒர்தி - தியானம் செய்வாயாக. நெஞ்சே - என்னுடைய மனமே.

ஒரோர்கால் - ஒவ்வொரு தடவை. வாய்விட்டு - யாவரும் கேட்கும்படி வாய்விட்டு. நம் பெருமான் - நம்முடைய கடவுள். என்று - என்று சொல்லி, ஏ அசை நிலை. ஒலம் இடும் - கூக்குரல் இடுவாள். சீர் - முருகனுடைய பெருமைகளை ஒர்கால் - ஒரு தடவையும். ஒவாமல் - நீங்காமல். நெஞ்சில் - தன்னுடைய மனத்தில், நினைப்பாள் - தியானம் செய்வாள். சிவன் தருசேய் - சிவபெருமான் பெற்ற திருமகனாகிய முருக பிரான், ஈரமுடன் - அன்புடன். அருள் செய்குவன்கொல் - கருணை புரிவானோ ? ஒ அசைநிலை. சொல் என்பதே வினாவாதலின் ஒ அசைநிலை ஆயிற்று. என - என்று சொல்லி. அழுவான் - புலம்புவான். பேர் உடை - புகழை உடைய, பால முருக - இரத்தின கிரியில் எழுந்தருளியுள்ள பால முருகனே. இப் பேதையை - இந்தப் பெண்ணை, பேணுவை - காப்பாற்றுவாயாக. இது பால முருகனை நாயகனாக வைத்து ஒரு தலைவி படும் வருத்தத்தைச் சொல்லியது.

பேணும் உடம்பினை - பாதுகாக்கும் தேகத்தை பெற்றதனால் - அடைந்ததனால். பயன் - பிரயோசனம், பீடு உற - பெருமை

32