பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

உடலைக் காக்கும் கலையில், உடற்கல்வியானது உலகில் முன்னிலையில் நிற்கிறது.

‘எங்கு சுற்றினாலும் அரங்கனை சேவிக்க வரவேண்டும்'. என்பது ஒரு பழமொழி

அதுபோலவே, ஆயிரம் கலைகள் தோன்றினாலும், அற்புதமாக விஞ்ஞான முன்னேற்றத்தை நிகழ்த்தினாலும், அத்தனை சுகத்தையும் அனுபவிக்க, ஆதாரமாக உடல்தானே அமைந்திருக்கிறது. அதற்காக உடற்கல்வியிடம் எல்லோருமே வந்துதான் ஆக வேண்டும்.

உடல் நலிந்தால், உலக வாழ்வே குலைந்து போகும். ஊறுகின்ற ஞானங்களும், ஞாயங்களும் அழிந்தே போகும்.

அப்படி நேர்ந்து விட்டால், அகிலத்து மக்களை அனுசரனையுடன் காக்க, அன்புடன் வழிகாட்டும் அரிய கல்வியாகவே உடற்கல்வி திகழ்கிறது; மகிழ்கிறது.

குழந்தைகளை, மாணவர்களை, வாலிபர்களை, வயோதிகர்களை என்று வயது வாரியாகப் பிரித்து; இனம் வாரியாகத் தொகுத்து, ஏற்றவர்களுக்கு ஏற்ற முறையில் போற்றும் வகையில் உடற் கல்வி உதவி உறுதுணையாக நிற்கிறது.

உடலுக்கு வளமும் வலிமையும் வேண்டுமா? வாழ்வுக்குத் தெம்பும் திடமனதும் வேண்டுமா? வந்து தொந்தரவு தரும் நோய்களை விரட்டியடிக்க வேண்டுமா? வருமுன்னரே ஒழிக்க வேண்டுமா?

உடற்கல்வி பல உபாயங்களைக் காட்டுகிறது. உண்மையான ஆரோக்கியத்தை அளித்து ஆனந்தத்தை வளர்த்து, அதிசயமாக வாழ வழி காட்டுகிறது.

அப்படிப்பட்ட உடற்கல்வியைத் தான். எவ்வாறு கற்பிக்க