பக்கம்:ஆபுத்திரன் அல்லது புண்ணியராஜன்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

ஆபுத்திரன்

-விற்கு முன்னுெரு காலத்தில் வந்தேன்; அதுமுதல் இந்திரன் கட்டளையால் இத்தரும பீடிகையைக் காத்துக்கொண்டு இங்கிருக்கின்றேன்; என் பெயர் தீவதிலகை" என்று தன் வரலாறுகூறிப் புத்தபீடிகையின் மகத்துவத்தையும் அதனைத் தரிசித்து மணிமேகலை பழம்பிறப்புணர்ந்ததையும் புகழ்ந்துகூறினாள்.

கூறியவள், பின்பு ஆபுத்திரன் கோமுகிப் பொய்கையில் முன்விட்ட அக்ஷயயபாத்திரத்தை மணிமேகலையின் கையில் சேர்க்க எண்ணி, "இப்பீடிகைக்கு முன்னே மாமலர்க் குவளையும் நெய்தல் பூக்களும் மிகுந்து, கோமுகி என்னும் பொய்கை ஒன்றுள்ளது; அப்பொய்கையுள் ஒரு அமுதசுரபி யென்னும் அக்ஷயபாத்திரம் அமிழ்ந்திக் கிடக்கின்றது; அது ஒவ்வொரு வருடத்திலும் புத்ததேவர் அவதார காலமாகிய வைகாசசுத்த பூர்ணமை நாள்தோறும் மேலே வந்து தோன்றாநிற்கும்; அந்தநாள் இந்நாளேயாம்; அது தோன்றும் வேளையும் இதுவே; இப்போது அப்பாத்திரம் அருள்.அறம் பூண்ட உனது கரத்தில் வருமென்று கருதுகின்றேன்; அதில் எடுக்கும் அன்னம் எடுக்க எடுக்க மேன்மேலும் வளர்ந்து கொண்டே வரும்; அதன் வரலாற்றைப் பின்பு புகார் நகரத்த அறவணவடிகளிடம் கேட்டுணர்வாயாக" என்று மணிமேகலைக்குச் சொன்னாள்.

இவற்றைக்கேட்ட மணிமேகலை அதனே விரைந்து பெறுவதற்கு விரும்பிப் புத்தபீடிகையை வணங்கிக் கோமுகிப் பொய்கையை அடைந்து, வலமாக வந்து நின்றாள்; அவ்வளவில், அப்பாத்திரம் மணிமேகலை கையை அடைந்தது. உடனே அவள் அளவுகடந்த மகிழ்ச்சியடைந்து, புத்ததேவாது திருவடிகளைப் பலவாறு புகழ்ந்து,