பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

சூழ்நிலையில் பாடம் நடத்தக் கூடிய அமைதி கூட. இல்லாமல் இருக்கலாம்.

இவற்றையெல்லாம் அனுசரித்துக் கொண்டு, கற்பித்தலைத் தளராமல், இனிமை சூழ தொடர வேண்டும்.

4. பாடமும் நேரமும்

பாடத்தை நடத்துவதற்கேற்றவாறு நிறைய குறிப்புக்கள் எடுத்து வைத்திருந்தாலும்; தயாரித்ததைக் கற்பிக்க, அதிக ஆர்வம் கொண்டிருந்தாலும், போதிய நேரம் கிடைக்காமல் போகும் சூழ்நிலை ஏற்படும்.

அதனால் அதைரியமோ ஆத்திரமோ அடையாமல், பக்குவமாக நேரம் அறிந்து, நினைத்ததைக் கற்பிக்கும். சாதுர்யம் வேண்டும்.

5. மாணவர்களின் பெயர்கள்

தங்கள் பெயர்களை ஆசிரியர் கூறி அழைக்கும்பொழுது, மாணவர்களுக்கு மகிழ்ச்சியும். பெருமையும் ஏற்படும். அப்பொழுது அவர்கள் ஆசிரியர் மேல் மதிப்பும் மரியாதையும் பெருகிட, அவர் கூறுகிற கருத்துக்களைக் கூர்ந்து கேட்டு கற்றிடுவார்கள். அதுவே ஆசிரியரின் வெற்றியாக அமைந்து விடுகிறது.

6. பொறுமையும் திறமையும்

ஆசிரியர் அடிக்கடி கோபப்படுவது, வகுப்புச் சூழ்நிலை யையே மாற்றி விடும் ஓர் அசாதாரண சூழ்நிலையையும் ஏற்படுத்திவிடும். கோபப்படுகிறபோது, புத்திசாலித் தனமாக, கருத்தோடு போதிக்கிற கவனம் கட்டுக் குலைந்து