பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் ) 77 போனவன் போக்கில் போவேன் என்பது புரியாத் தனத்தின் வித்தாகும்-நெஞ்ச மானத் தன்மை வகுக்கும் வழிமுறை மதித்து நடப்பதே சொத்தாகும்? அறிஞரைப் போற்றி, அவர்களை வழிகாட்டியாக ஏற்று, அவர்கள் காட்டிய பாதையில் நடக்க வேண்டும் என்று பொதுவாக சொல்லப் படுவது உண்டு. பெருங்கவிக்கோவின் புதிய பார்வை அதை ஏற்றுக் கொள்ளச் சித்தமாக இல்லை. அதற்கான காரணத்தை அவர் தெளிவாகச் சொல்லுகிறார். முன்னே தோன்றிய அறிஞனைப் போற்றினும் முழு அடிமை நீ ஆகாதே-அடடே பின்னே அவனை நீ வெல்வது உண்மை பேரறிவாளன் நீ மறவாதே நெஞ்சம் இருப்பதோ கையளவில் தான் நினைவோ உலகை வெல்லும்-எந்த வஞ்சம் வரினும் வாழ்வோ தாழ்வோ வாகை உறுதி கொள்ளும்? மற்றவர் தீயகுற்றம் தனை மிதி மனிதத் தன்மை ஊட்டு! இவ்வாறு மனசை வீறுகொள்ளும்படி தூண்டும் கவிஞர், ஊட்டி வளர்த்தவர் காட்டிக் கொடுப்பாரேல் உந்திப் பழித் தொதுக்கு!-மனமே நாட்டில் பிழைக்கத் தெரிந்த மனிதரவர் நம்பிப்பின் செல்லாதே!’ என்று விழிப்புணர்வு ஊட்டுகிறார். சோர்வு அடையாத படி உற்சாகமாக உழைக்க வேண்டும் என்றும் அவர் ஊக்கப்படுத்துகிறார்.