பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் E 85 விம்முகிறார் மனதுக்குள்! வெளியே வந்து வேடிக்கை காட்டுகிறார்! அந்தோ அந்தோ!' என்று அங்கலாய்க்கிறார் கவிஞர். 'பொதுத் தொண்டு குறித்துப் பாடும்போது, இன்றைய நிலையை வேதனையோடு அவர் குறிப்பீடு கிறார். * இன்றுஎவன் நம் முன்னால் ஆள்கின்றானோ இவனே நம் கடவுளென எண்ணி அன்னான் பன்றியைப் போல் நடந்தாலும் பாதம் போற்றிப் பணிகின்றோம்! நாயை விடக் கீழாய், முன்னோர் நன்றியினை மறந்து விட்டோம் புத்தன் ஏசு நற்காந்தி நபிகள் பிரான் போன்றோர் கொள்கை கொன்று விட்டோம் குழிதோண்டிப் புதைத்தும் கூடக் கொஞ்சமேனும் நாணமின்றி இருக்கின் றோம் நாம்! பெரும் புகழைப் பெறவேண்டும் என்றால் நாட்டில் பேசுதல் போல் செயவேண்டும்! உயிரை ஈந்தும் அருஞ்செயலைச் செயவேண்டும்! அன்புவேண்டும் அநியாயம்! நம்மவர்கள் என் செய்கின்றார்? வருந்துகின்ற தீச்செயலைச் செய்தேனும் நல் வாய்ப்பதனை ஏற்படுத்திப் புகழாம் இன்ப விருந்து பெற நினைக்கின்றார்! இந்தப் போக்கை விரட்டுகின்ற போர்ப்படையாம் என்றன் - பாட்டு!”