பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆங்றல் மிகுந்த அருங்கவிஞர் E 72

  • மன்பதை அல்லவில் மனவேறு பாட்டினில்

மதி கெடத் துடித்தலும் ஏன்? ஏன்? மனிதர்கள் மனிதர்க்குள் மாவேறு பாடுகள் மல்கிடப் பிழிந்ததும் ஏன்? ஏன்? துன்பமும் துயரமும் மாந்தர் சுயநலமும் தோளினில் ஏறிய(து) ஏன்? ஏன்? துரோகமும் வஞ்சமும் பஞ்சமும் வதைத்திடத் துன்மார்க்கம் ஓங்கலும் ஏன்? ஏன்? வன்மனம் தன்னலம் பல்கிடும் மதங்களை வாய்மை யென்றே நம்பியே மனிதர்கள் தமக்குள்ளே வேற்றுமை கற்பித்தே வழக்காடும் தன்மை யன்றோ? உன் மதம் என் மதம் என்று பேதங்கள் வளர்க்காமல் எல்லோரும் ஒன்றாகி, மனிதர்கள் அனைவரும் சமம். என்ற உணர்வோடு ஒரு மதம் சமரசமாகி, உள்ளொளி பெற்ற வள்ளலார் காட்டிய வழியில் சென்றால் ஒரே உலகமாய் ஒரு குடும்பம் போல், வாழலாமே என்று. கவிஞர் கருதுகிறார். பெருங்கவிக்கோவின் சீற்றத்துக்கு ஒரு எடுத்துக் காட்டாக இவற்றைக் குறிக்கலாம் "வீரம் எங்கடா விவேகம் எங்கடா மானமின்றிச் சோரம் போகிறாய் தூ! தூ! தூ! நீயொரு சொரணையிலா பேரம் பேசிடும் பேடித் தமிழனே! உன்னையும் ஓர் சேர சோழநற் பாண்டிய மறத்தியா பெற்றிட்டாள்?