பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 ) வல்லிக்கண்னன் "தீதில்லா நெறியினிலே தெய்வம் உண்டு! திக்கெல்லாம் உறவாடும் இயற்கைத் தாயாள் மோதிவரும் அழகுருவில் தெய்வம் உண்டு!. முதிர்கின்ற அனுபவத்தில் தெய்வம் உண்டு! யாதினிலும் இனிய தெய்வம் நம்மை ஆக்கும். நற்தெய்வம் கற்பிக்கும் ஆசானேதான்! உழைக்கின்ற கரங்களிலே தெய்வம் உண்டு! உண்மையிலே நன்மையிலே தெய்வம் உண்டு விழைக்கின்ற தொண்டினிலே தெய்வம் உண்டு வெற்றியிலே நற்தெய்வம் உண்டு! ஏழை அழைக்கின்ற குரலினிலே தெய்வம் உண்டு! அன்னவர்கள் துயர்தீர்ப்பான் உண்மைத் - - தெய்வம்: தழைக்கின்ற கொழுந்துறை வாழ் மக்கள் தம்மின் தமிழ்த் தொண்டில் தனித் தெய்வம் என்றும உண்டு தென்னையிளங் கீற்றினிலே தெய்வம் காண்பேன்: சிறுமையிலா அருமையிலே தெய்வம் காண்பேன்! புன்னை மரச் சோலையிலே பூக்கும் வையப் +. பொழிலெல்லாம் தெய்வத்தைக் காண்பேன்! நன்றாய் என்னைநான் எண்ணித்தான் பார்க்கும் போதென் இதயத்தில் தெய்வத்தைக் காண்பேன்! ஒப்பில் அன்னைமொழி எழுத்தில் நல் எழுது கோலில் அகிலம் உள் அனைத்திலுமே தெய்வம் காண்பேன்: