பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வல்லிக்கண்ணன் அஞ்சி அஞ்சி அயர்ந்து நெகிழ்ந்து பஞ்சைபோல் வாழும் பண்பு வேந்தர்கள்’ என்றும் சொல்லி, இவர் பெரும் அறிவை இந்நாடு இயக்கி னால், தவம் வென்றது போல்தான் வரும் நலமே என்று அபிப்பிராயம் தெரிவிக்கிறார். பொதுவாக, மேடைமீது நின்று நீட்டி முழக்கிப் பெரும் பேச்சுகள் பேசிக் களிப்பவர்கள்தான் மிகுதியாக இருக்கிறார்கள். அந்தப் பேச்சைக் கேட்பவர்களோ கை தட்டி மகிழ்கிறார்கள். அந்தக்கரவொலிப் பேச்சாளர்களை கிறக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர்கள் செயல்திறன் காட்டுவதில்லை. இந்த நிலையை பெருங்கவிக்கோவின் பாட்டு சூடாகச் சுட்டுகிறது.

  • நின்று தலைநிமிர்த்தி நெடும் பேச்சுப் பேசிவிட்டுக் கூட்டத்தின் கரவோசைச் குளிர்ச்சியிலே

- மெய்மறந்து நீட்டிப் படுத்ததலன்றி நேர்மையாய் யான் என்று திறமை காட்டிச் செயலாக்கம் செய்தவர் யார்? 'சிறுமைத் தனத்தில் திறமை கொன்று சீரழிந் தேகுவதோ! வறுமை வாழ்வைப் பெரிதாய்க் கண்டு மனம் இழப்பதுவோ?’ என்று கேட்கும் கவிஞர், மனிதனாக நடப்பது எவ்விதம் என்று கூறுவது சிந்திக்கத் தூண்டுவ தாகும். மனிதன் என்பது பொதுச் சொல் எனினும் மலரும் முகங்கள் பலவிதம்-இந்த தனித்தனி மனிதர் நடக்கும் வழிகளும் தனித் தனியாகப் பலவிதம்!