பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வல்லிக்கண்ணன் @ கூறலாம். (மா. செங்குட்டுவன்-'முத்தமிழ் மாமணிகள் கவிதைத் தொகுப்பின் அணிந்துரையில்.) மதங்களுக்கு எ தி ரா ன அதிர்வேட்டுகளாகவே கவிஞரின் கவிதைகள் அமைந்துள்ளன. 'மதத்தை ஒழிப்பதற்கு மார்தட்டி அழைக்கின்றேன் எதற்கும் நான் அஞ்சாமல் என்னருமைத் தாய் நாட்டீர் அழைக்கின்றேன் அழைக்கின்றேன்! என்று முழக்கம் செய்கிறார் கவிஞர். "எற்றுக்கு மதம் வேண்டும்? சொல்லுங்கள்! மதங்கள் பல தோன்றினவே? மடமை ஒழிந்ததுவா? சாதிகள்பல சாய்ந்ததுவா; சமஉரிமை வந்ததுவா? சாதிமுறை ஒழிந்ததென்று சாற்றுதற்கு நியாய . முண்டா? நாதியற்ற ஏழையரை நலியாமல் காத்ததுண்டா? பொய்மை ஒழிந்ததுவா? புரட்டும் அடங்கியதா? மெய்மை நிலைத்ததுவா? மேன்மை வளர்ந்ததுவா? பொறாமையும் வஞ்சகமும் பொக்கெனவே போனதுவா? சூதுகளும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் மாய்ந்ததுவா? வாதுகளும் வம்புகளும் வாய்ச்சண்டை - ஒழிந்தனவா? எத்தனையோ மதத்தலைவர் இத்தரையில் தோன்றினரே அத்தனை பேரும் அரற்றிவிட்டுச் சென்றனரே! என்னதான் பெரும்பயனை இந்தப்பூமி கண்டதையா?”