பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.50 வல்விக்கண்ணன் 'காலம் கடந்த கனி அருள் நிலமே ஞாலம் கடந்த நடைதரும் அறமே நீல விண்ணின் நிலைகளின் திறமே சாலப் பண்பார் தவமே குருவே" இப்படிப் பாடல்கள் தமிழ் இனிமையை உணர்த்துவதாக வும் ஒலிக்கின்றன. மணியின் ஒசை வாழ்த்தும் ஒளியே அணியின் எழிலே ஆர்வ மொழியே பணியின் செயலே பார்வை வழியே வணங்கும் நுதலே வாழிய குருவே!" என்று போற்றிப்பரவும் பாடல்களைக்கவிதை ஒட்டத்துக் காகவும் செஞ்சொல் நயத்துக்காகவும் பலமுறை படித்து மகிழலாம் அதே போல ஐயப்பனைப் போற்றித் துதிக்கும் பாடல்களும் இயற்கை வளங்களை வியக்கும் இனிய கவிதைகளாகவும், பக்திக் கனலும் உள்ளத்தின் உணர் வலைகளாகவும் வெளிப்பட்டு, ரசனைக்கும் விருந்தாகத் திகழ்வதைக் காணலாம். மேகம் வந்து கூடி நின்று வேகமாக ஓடும் மின்னலோடு இடி இடித்துப் பொன்மழை யாக்கூடும் வகமாகத் தாவும் நதி மேலும் மேலும் வீழும் விண்ணை முட்டும் நன்மரங்கள் மண்ணைத் தொட்டு ஆளும்