பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 வல்விக்கன்னன் முச்சந்தி நின்று தான் முழங்கியே பேசிப்பின் முன்னுக்குப் பின் முரணாய் முறை கெட்டு நடப்பவர் கறைபட்ட வாழ்வினால் முன்னேற்றம் இங்கு வருமோ? பச்சோந்தியாகவே பல வண்ணம் காட்டாத பாதைகள் புதுமை செய்வோம் பாரத அன்னையின் ஒன்றான சிந்தனை பயனாக்கி நாமும் வெல்வோம்" ஊருக்கு உழைப்பதாய்க் கூறியே, நல்ல உத்தமர் வயிற்றில் அடிக்காதே. என்றும், பேருக்கும் புகழுக்கும் அவையாதோ வஞ்சப் பித்தலாட்டங்கள் நினையாதே என்றும், தமிழின் பெயர் சொல்லி வியாபாரம் தவறான் முறையில் செய்யாதே-உமியாய் நல்லவரை எண்ணாதே, கெட்ட உலுத்தத் தனம் பண்ணாதே என்றும் அவர் எச்சரிக்கிறார். அறந்தவறாமல் வாழ்ந்தால் அகத்தினிய வலிமை ஓங்கும் திறந்தவறாமல் வாழ்ந்தால் செம்மைசால் நலங்கள் தேங்கும் சிறந்தபேர் பணிகள் செய்தால் செய்தவக் கணிபழுக்கும் உறவெனக் கவிதை கண்டால் உளமூன்றும் வாழ்க்கை சூடும்!" மனிதர்களுக்குள் காணப்படும் மாறுபாடுகள் புற்றி யும், அவை நீங்குவதற்கான வழிகள் குறித்தும் பெருங்: கவிக்கே சிந்தனைகள் வளர்த்துள்ளார்.