பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுத்த அதங்கவிஞர் .ெ சிே 'மதமென்ன சாதியென்ன இந்த நாட்டில் மார்க்கங்கள் தான் என்ன? உலகில் உள்ள அதர்மங்கள் தானொழிய வேண்டுமென்றால் அறமொன்றால் தானியலும் இதனை விட்டு விதவிதமாய்ப் பூசனைகள் செய்வோரெல்லாம் வீட்டுக்கு விளக்கேற்ற மறந்தார் நல்ல பதமெல்லாம் பார்க்கின்ற மோட்ச மெல்லாம் பக்தர்களே பசித்தோரின் வயிறொன் றேதான்! வீணாக அலைகின்றார் துறவி என்றே வீம்புக்கே நடக்கின்றார் அந்தோ வெட்கம்!! சாணாக ஒடுங்கிவிட நினைத்தே அன்புச் சம்சாரம் வெறுக்கின்றர் இவைகள்எல்லாம். பூணாத சடங்கன்றோ ஆசை தன்னைப் பூட்டுகின்ற திறவுகோல் நீர் தவறவிட்டு ஏனிங்கே மயங்குகிறீர் இனியே னும் நீர் ஏழையர்க்குத் தொண்டுசெய முன்வாருங்கள்" என்ற நல்ல கருத்தை வலியுறுத்துகிறார். மனிதர்கள் நல்வாழ்வு பெறுவதற்கு வகை செய்யக் கூடிய உயர் எண்ணங்களைச் சொன்ன வள்ளலாரின் கருத்துக்கள் பெருங்கவிக்கோவை ஈர்த்துள்ளது. அவற்றை அவர் பரிந்துரை செய்யும் தன்மை போற்றுதலுக்கு உரியது. "மதம்வேண்டாம் சாதிவேண்டாம் மார்க்கம் ஒன்றே மனிதருக்குள் உலகத்தில் இருந்தால்போதும் கதகதப்பாய்க் குளிர்காய அமைத்தார் கீழ்மைக் கயவர்கள்தாம் சாதிமதச் சமயச் சண்டை!