பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் 0 விரித்தடிக்கும்.கூட்டமும் மேதினியில் இன்றுண்டு. தானும் வாழாமல் தமிழ்நாடும் வாழாமல் பேனுற்ற தலைபோலப் பிதற்றித் திரிவோரால் யாருக்குப் பயனாம் நல்லோரே எண்ணுங்கள்’ என்று சிந்தித்துப் பார்க்கத் தூண்டுகிறார் பெருங் கவிக்கோ. - ~ நாடு முன்னேறவும் நாட்டு மக்கள் நலமுறவும் நாம் செய்ய வேண்டியது என்ன? அதையும் கவிஞர் அங்கங்கே வலியுறுத்தத் தவறவில்லை." தொண்டுக்கு முதலிடம் தருவோம்-எந்தத் துறையிலும் நன்மை கொணர்வோம் பண்டுநம் பெருமைகள் அறிவோம்-அருமைப் பாடுகொள் வினைகளைத் தெரிவோம் மண்டைக் கர்வம் குறைப்போம்-கெட்ட வஞ்சகர் வாசலை அடைப்போம்! தண்டச் சோறின்றி உழைப்போம்-இதற்கே சாதனைச் சிந்தனை ஒன்றே என்போம்.’’ நாடு கெட்டு இன்று நலமின்றிப் போனதில் நம் எல்லோருக்குமே பங்கு உண்டு என்றும் அவர் அறிவுறுத்து கிறார். மனசில் தைக்கும் படி சுட்டுகிறார் 'நச்சினை விதைத்திட்டே நற்பழம் வேண்டினால் நாடிக் கைவந்து சேருமோ?, நன்றியைக் கொன்றிட்டே ஒன்றாக விரும்பினால் நம்பியது கை கூடுமோ?