பக்கம்:ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. உலகம் தழுவும் நோக்கு தாய்மொழிப் பற்றும் தம் இனப் பற்றும் கொண் டுள்ள பெருங்கவிக்கோ,இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டு உணர்வை வலியுறுத்துவதுடன், உலக ஒற்றுமையை வளர்ப்பதிலும் கருத்துடைய கவிஞராகத் திகழ்கிறார். ‘உலக ஒற்றுமை ஓங்கிட வேண்டும் வையம் ஒன்றே எனப்புவி ஒழுகிட வேண்டும். கலகம் செய்யும் கயமைகள் எல்லாம் இன்றே கண்டிப்பாக நீங்கிட வேண்டும் - மக்கள் எல்லாரும் ஒரு தாய் மக்கள் பூமி மானுடம் எல்லாம் ஓர் குடும்பம்! செக்கர் வானிலோர் சூரியன் போல பாரின் தேசம் ஒன்றாய் ஒளிர்ந்திட வேண்டும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்-என்றே நவின்றதும் முதன்முதல் எம் தமிழினம் ஒதும் இதைச் செயல் உறுதிப் பாட்டினால் - இணைவம் ஒரேகுடை ஆட்சி காணல் நம் கடன்’ - போர்கள் ஒழியவேண்டும், எங்கும் அமைதி நிலவிட வேண்டும் என்று ஆசைப்படும் கவிஞரின் உள்ளம் கொதிப்